March 2007
Monthly Archive
Monthly Archive
Posted by mugunth on 31 Mar 2007 | Tagged as: கணிணி
தமிழ்ப்பதிவுகள் திரட்டியில் பயன்படுத்தும் மென்பொருளை மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் திறமூலமாக்கியுள்ளேன்.
இத்தளத்தில் இதை ஒரு தனிப் புரோஜக்டாக பதிந்துள்ளேன்.
http://code.google.com/p/tamilblogs/
தேவைப்படுவோர் இந்தச் செயலியைப் பயன்படுத்தி உங்களுக்கென தனியாக பதிவுகள் திரட்டியை அமைத்துக்கொள்ளலாம்.
அதேபோல் இச்செயலியை மேம்படுத்தவும் நீங்கள் உதவி செய்யலாம். இதற்கு நீங்கள் நிரலெழுதவேண்டும் என்று கட்டாயமில்லை.
கீழேயுள்ள மற்ற வழிகளில் நீங்கள் உதவி செய்யலாம்:
1. இச்செயலியிலுள்ள குறைகளை கண்டுபிடித்துச் சொன்னால் மேம்படுத்த உதவியாக
இருக்கும். இதற்கு இந்த செயலியை தனியாக நிறுவிப்பார்க்க வேண்டாம். தமிழ்ப்பதிவுகள் தளத்திலிலுள்ள குறைகளை சுட்டிக்காட்டினாலே போதும்.
2. இச்செயலியில் என்ன என்ன புது வசதிகளை கொடுக்கலாம் என்று உங்கள் கருத்துக்களையும் பதிவுசெய்யலாம்.
குறைகளை மற்றும் புது வசதிப் பற்றி தெரிவிக்க இந்த வலைச்சுட்டியைப் பயன்படுத்தலாம்: http://code.google.com/p/tamilblogs/issues/list
3. இச்செயலியைப் பயன்படுத்துவோர் பயன்படுக் கொள்ளத் தேவையான உதவி ஆவணங்களை தயாரித்து அளிக்கலாம்.
4. உங்கள் நண்பர்களிடம் இச்செயலியைப் பற்றி சொல்லலாம்.
Posted by mugunth on 11 Mar 2007 | Tagged as: தமிழ்ப்பதிவுகள்
தமிழ்ப்பதிவுகள் திரட்டியில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். இதுவரை lilina என்ற கட்டற்ற மென்பொருளை பயன்படுத்திவந்தேன். இந்த மென்பொருளில் தரவுத்தளம் கிடையாது, திரட்டப்படும் பதிவுகள் விபரம் அனைத்தும் கோப்புகளாகவே சேமிக்கப்படும். இந்த முறையினால் வேண்டிய மாற்றங்களை செய்யவது கடினமாக இருந்தது.
தற்போது தரவுத்தள வசதியை கொண்டுள்ள lylina என்ற மென்பொருளை அடிப்படையாகக் கொண்டு புதிய தமிழ்பதிவுகள் திரட்டியை உருவாக்கியுள்ளேன்.
பயனரைப் பொருத்தவரை தமிழ்ப்பதிவுகள் தளத்தில் அவ்வளவாக மாற்றங்கள் தெரியாது.
தற்போதுள்ள ஒரே மாற்றம் rss செய்தியோடை முகவரி மாற்றம் தான்.
புதிய செய்தியோடை முகவரி: http://tamilblogs.com/rss.php
நீங்கள் தமிழ்ப்பதிவுகள் செய்தியோடையை உபயோகிப்போராக இருந்தால் செய்தியோடை முகவரியை மாற்றிக்கொள்ளுங்கள்.
மேலும் மாற்றங்கள் சில தினங்களில் …