July 2006
Monthly Archive
Monthly Archive
Posted by mugunth on 30 Jul 2006 | Tagged as: பொது
நண்பரின் குழந்தைக்கு பெயர்வைக்க நல்ல தமிழ்பெயர்களை வலையில் தேடும்போது இந்தத்தளம் கண்ணில் பட்டது.
http://www.nithiththurai.com/name/index.html
மிகவும் பயனுள்ள தளம்.
விடுதலைப்புலிகளின் தமிழ்வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள ஒரு கையேட்டை இந்தத் தளத்தில் கொடுத்துள்ளார்கள். இங்கு 46000 தூயத்தமிழ் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
குழந்தைக்களுக்கு தூயத்தமிழில் பெயர் வைக்க விரும்புவோர் இத்தளத்தை புக்மார்க் செயத்துக்கொள்ளலாம்.
Posted by mugunth on 24 Jul 2006 | Tagged as: கணிணி
தமிழ்மணம்.காம் திரு.காசி கோவையில் 26-ஜூலை-2006 அன்று வலைப்பதிவுகளைப்பற்றி ஒரு கருத்தரங்கை நடத்த உள்ளார். வாய்ப்பு உள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
மேல் விபரங்களுக்கு காசியின் வலைப்பதிவைப் http://kasiblogs.blogspot.com/2006/07/seminar-on-blogs-at-csi-coimbatorehtml பார்க்கவும்.
Posted by mugunth on 13 Jul 2006 | Tagged as: பொது
கணினித்தமிழுக்கு பல வகையிலும் சேவை செய்து வந்த நண்பர் உமர் அவர்கள் கடந்த 12-07-2006 அன்று மரணமெய்தினார் என்ற துயரசெய்தி கிடைத்தது.
மறைந்த உமர் அவர்களுக்கு தமிழுலகம் மிகவும் கடன்பட்டிருக்கிறது.