October 2004
Monthly Archive
Monthly Archive
Posted by mugunth on 28 Oct 2004 | Tagged as: பொது
இன்று ஒரு வழியாக என் பழைய வழைப்பதிவினை மீட்டு என் புதிய சேவையகத்தில் இயங்கும்படி செய்துவிட்டேன். இனி தமிழா.காம், தமிழ்புளோக்ஸ்.காம் மற்றும் தமிழா டெவலப்பர் தளங்களை செயல்படும் நிலைக்கு கொண்டுவர வேண்டும். நேரம் கிடைப்பதுதான் தற்போது குதிரைக்கொம்பாகிவிட்டது.
தமிழா! திட்டத்தையும், வலைத்தளத்தினை சிறப்பாக கூட்டுமுயற்சியாக இன்னும் சிறப்பாக செயல்படுத்தவேண்டும், அதன் மூலம் அனைத்துத் தமிழருக்கும் கணினித்தொழில்நுட்பத்தின் பலன்கள் எளிதாகக் கிட்டவேண்டும்.� அதன் மூலம் உலகளவில் பெரும் பொருளார சக்தியாகத் தமிழினம் வளரவேண்டும் என்பதே என் கனவு… இறையாற்றல் துணையுடன் கனவு மெய்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை…
Posted by mugunth on 17 Oct 2004 | Tagged as: கணிணி
இந்தவாரத்தில் தமிழ் திறவூற்று உலகில் இரண்டு குறிப்பிடதக்க விசயங்கள் நடந்தது (குறைந்தபட்சம் என்பார்வைக்கு எட்டியவரையில்).
1. தமிழ் ஒப்பன் ஆபீஸ் மொழிபெயர்ப்புக்கோப்புக்கள் அனைத்தும் எளிதான .po வடிவத்திற்கு் மாற்றப்பட்டது!
2. மயூரன் தமிழ் கையெழுத்துணரி மென்பொருளினை அறிவித்தார்!
இவற்றைப்பற்றி என் எண்ணங்கள்….
முதலாவது => தமிழ் ஒப்பன் ஆபீஸ் மொழிபெயர்ப்புக்கோப்புக்கள் அனைத்தும் .po வடிவத்தில் மாற்றப்பட்டது.
ta.openoffice.org மடற்குழுவிலுள்ள இந்த மடலைப்பார்க்கவும்: http://ta.openoffice.org/servlets/ReadMsg?list=discuss&msgNo=71
ஓப்பன் ஆபீஸ் மொழிபெயர்ப்பு கோப்புகள் சாதாரண பயணர்கள் எளிதில் கையாலமுடியாதபடி புதிய வடிவில் இருக்கும். அதனால் ஓப்பன் ஆபீஸ் மென்பொருளை மொழிமாற்றம் செய்வது கடினம். இதுவரை ஒப்பன் ஆபீஸ் தமிழ் மொழிபெயர்ப்பை பெங்களுர் பாரதீயோ குழுவைச்சார்ந்த வல்லுனர்கள் செய்து அதன் கோப்புகளை (ஓப்பன் ஆபீஸின் GSI வடிவில்) ஓ.ஆ. சமூகத்திற்க்கு கொடையாகக் கொடுத்திருந்தனர். அந்தக் கோப்புகளையும், அறிவிப்பையும் இங்கே காணலாம்: http://ta.openoffice.org/issues/show_bug.cgi?id=30428
அந்த மொழிபெயர்ப்புக் கோப்புகளை எளிதில் கையாளக்கூடிய வகையில் .po வடிவில் மாற்றவேண்டும் என்று பலரின் உதவியை நாடினேன். கடைசியில் http://translate.sourceforge.net/ குழுவினரின் உதவியுடன் அது சாத்தியமாயிற்று. இக்குழுவின் Dwayne Bailey மற்றும் David fraser ஆகியோர் என் வேண்டுகோளுக்குப் பிறகு மாற்றிக்கொடுத்தனர்.
தற்போது .po வடிவில் தமிழ் ஓப்பன் ஆபீஸ் பதிப்பு 1.1.3 இன் மொழிக்கோப்புக்கள் இந்த வலை சுட்டியில் http://prdownloads.sourceforge.net/translate/OOo-1.1.3m47-Tamil-po.tar.bz2?download பதிவிறக்கிக் கொள்ளலாம்.
இதனை poedit என்ற எடிட்டரைக் கொண்டு எளிதில் மொழிபெயர்க்கலாம். விண்டோஸ் கணினிக்கான poedit ஐ http://poedit.sourceforge.net/ என்ற சுட்டியில் இறக்கிக்கொள்ளலாம்.
தமிழ் ஓப்பன் ஆபீஸ் 1.1.3 பதிப்பை தமிழில் சிறப்பாக, மொழிபெயர்ப்புப் பிழைகள் இன்றி வெளியிட ஆர்வமுள்ளவர்கள் உதவவேண்டுகறேன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:
1. poedit ஐ http://poedit.sourceforge.net/ என்ற சுட்டியில் இறக்கிக் நிறுவிக்கொளுங்கள். முக்கியக் குறிப்பு: உங்கள் கணினி விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விண்டோஸ் 2000 ஆகத்தான் இருக்கவேண்டும். ஏனேன்றால் நாம் ஓப்பன் ஆபீஸில் கையாளுவது யூனிகொட் தமிழ்தான்.
2. பிறகு http://prdownloads.sourceforge.net/translate/OOo-1.1.3m47-Tamil-po.tar.bz2?download சுட்டியிலுள்ள கோப்புக்களை எடுத்து அதிலுக்க கோப்புகளை poedit மூலம் திறந்து அதிலுள்ள மொழிபெயர்ப்பின் பிழைகளைக்கழையலாம். அல்லது மொழிபெயர்க்கப்படாமல் இருக்கும் கோப்புக்களை மொழிபெயர்த்துக்கொடுக்கலாம்.
நீங்கள் மாற்றியக்கோப்புக்களை எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பவும்.
தற்போது இலங்கையிலிருந்து ராஜ்காந்த் என்பவரும் , பெங்களூர் உமா மகேஸ்வரனும், மற்றும் மலேசிய நண்பர் தினேஸ்ம் ஓப்பன் ஆபீஸ்மொழி 1.1.3 பெயர்ப்பில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர். விரைவில் மேலும் நண்பர்கள் கைகோர்ப்பார்கள் என்று நம்புகிறேன். நவம்பர் கடைசிவாரத்தில் இதனை முடிக்க முயற்சி செய்யவேண்டும் என்று எனக்குள் முடிவுசெய்துள்ளேன். எப்படி செயலாக்குவது என்று இனிதான் யோசிக்கவேண்டும்….
அடுத்த குறிப்படத்தக்க வளர்ச்சி => மயூரனின் தமிழ் கையெழுத்துணரி மென்பொருள்.
பார்க்க….
http://mauran.blogspot.com/2004/10/blog-post_12.html
http://mauran.blogspot.com/2004/10/blog-post_13.html
இது ஒரு அருமையான முயற்சி. இதனை சரியானபடி திட்டமிட்டு குழுவாக சேர்ந்து செயலாற்றினால், இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழனுக்கு சிறந்த திறவூற்று சாதனங்கள் பல உருவாக வாய்ப்பு உள்ளது. முதற்கட்டமாக இம்முயற்சியை பரி மற்றும் திறவூற்று திட்டமாக மயூரன் அறிவித்து sourceforge.net போன்ற தளங்களில் புதிய திட்டமாக தொடங்கலாம். அதன் பிறகு உலகெங்கிலும் உள்ள ஆர்வலர்களை இத்திட்டத்திற்கு ஈர்பது எளிதாக இருக்கும்.
மயூரனின் முயற்சி வெற்றியடையவும் அதன் மூலம் தமிழ் சமுதாயம் பயன் பெறவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!