September 2004
Monthly Archive
Monthly Archive
Posted by mugunth on 27 Sep 2004 | Tagged as: கணிணி
என் வலைப்பதிவு தமிழ் படுத்தப்பட்ட நியூக்கியஸ் செயலியைக்கொண்டு இயங்குகிறது. அதில் நீண்ட நாட்களாக செய்தியோடையில் பிரச்சனை இருந்துகொண்டே இருந்தது. அதைக்களையும் விதத்தை நண்பர் காசி அன்மையில் குமரகுரு அவர்கள் அனுப்பிய ஒரு மடலை எனக்கு முன்னனுப்பி தெரிவித்து குறைக்களைய உதவினார்.
நியூக்களியஸில் செய்தியோடைப் பிரச்சனையைத் தீர்த்துவைத்த மடல் இதோ உங்கள் பார்வைக்கும்… உங்களில் யாராவது நியூக்கிளியஸ் பயன்படுத்துவோர் இருந்தால், உங்களுக்கு இது கண்டிப்பாகப் பயனுள்ளதாக இருக்கும்.
என் வலைப்பதிவின் தமிழ் இடைமுகத்தைதின் படங்கள் சில… இதிலுள்ள சிறு சிறு குறைகளைக் களைந்தால், இந்த இடைமுகத்தை ஆங்கிலம் தெரியாத தமிழர்களும் எளிதாகப்பயன்படுத்தி வலைப்பதிவிட முடியும் என்று நான் நம்புகிறேன். இதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க…
Posted by mugunth on 21 Sep 2004 | Tagged as: வாழ்க்கை
ஊரில் இருந்து மலேசியா திரும்பி கிட்டதட்ட 1 வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஊரிலிருந்து கொண்டுவந்தப் புத்தகங்களில் இண்போசிஸ் ஃபவுண்டேசன் தலைவி சுதா மூர்த்தி எழுதிய ‘உள்ளங்கையில் உலகம்’ புத்தகமும் ஒன்று. தற்போது அதைப்படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் 17ஆவது கட்டுரையாக பெற்றோர்கள் எப்படி அளவுக்கு அதிகமாக பிள்ளைகள் மேல் பாசத்தைக் காட்டி அவர்களின் சுதந்திரத்தை தடுக்கிறார்கள் என்பதை அழகாக எழுதியுள்ளார்.
அந்தக்கட்டுரையில் அவர் குறிப்பிட்ட இந்த வரிகளை அனைத்துப் பெற்றோரும் (குறிப்பாக வயதுவந்த பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள்) படிக்கவேண்டும்.
“…சிறகு முளைத்த பிறகும் பறவையை எத்தனை நாள்தான் கூண்டிலேயே அடைத்து வைத்திருக்கமுடியும்? நம் குழந்தைகளுக்கு இரண்டே இரண்டு விஷயங்களைத்தான் நம்மால் கொடுக்க முடியும்: அவை ஆழமான வேரும், உறுதியான சிறகுகளும். அப்போதுதான் அவர்களால் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாகப் பறந்து செல்ல முடியும்ழ வாழ்க்கையில் எந்த வசதி அவசியமானது என்று கேட்டால் பணமோ, பொருட்களோ அல்ல. சரியான வகையில் இயங்கத் தகுந்த சுதந்திரம்தான். அப்படிப்பட்ட சுதந்திரம் மனிதனுக்கு முதிர்ச்சியைத் தருகிறது. மனிதன் சரியான முடிவுகள் எடுக்க உதவுகிறது. அப்படிப் பட்ட முடிவுகள் நம்பிக்கையைத் தருகின்றன. அதுதான் உண்மையான செல்வம்… “
Posted by mugunth on 13 Sep 2004 | Tagged as: வாழ்க்கை
என் பள்ளித்தோழன் அனுப்பிய ஒரு மடலில் எங்கள் பள்ளியைப்பற்றிய ஒரு ஹிந்து நாளிதழ் செய்தியைப் பார்த்தேன். என்னுள் 14 வருடத்திற்கு முந்தைய நினைவுகளை எழுப்பியது இச்செய்தி…
நான் படித்தது சைனிக் பள்ளி யில். நான் நானாக இருக்க ஒரு முக்கியக் காரணமும் இந்தப்பள்ளிதான்…

மேலேக் காணப்படும் இந்தப்படம் எங்கள் பள்ளியின் இல்லங்களுக்கிடையே நடக்கும் விளையாட்டுப்போட்டிகளின் போது மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கோட்டை வடிவ செட்டைக்காட்டுகிறது.
இந்த கோட்டை படத்தை வெகு நாளைக்குப்பிறகுப் பார்த்தவுடன் என் நினைவுகள் 14 வருடத்திற்கு முந்தைய என் பள்ளிநாட்களுக்குச் சென்றுவிட்டது. என் பள்ளித்தோழர்களை இன்றும் தொடர்பில் வைத்திருக்க உதவிய இணைய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன் _/\_
எங்கள் பள்ளியில் நடக்கும் இல்லங்களுக்கான போட்டிகள் வெகு பிரபலம். நான்கு இல்லங்கள் இருக்கும் சேரா, சோழா, பாண்டியா மற்றும் பல்லவா என்பவை இல்லங்களின் பெயர்கள். 6ஆம் வகுப்பில் சேரும் போது எந்த இல்லத்தில் சேர்கிறோமோ அதிலேயே 12 ஆம் வகுப்பு முடிந்து வெளிவரும் வரை இருப்போம்.
ஒரே இல்லத்தைச் சார்ந்தவர்கள் ஒரே கட்டடத்தில(விடுதியில்)் தங்கியிருப்போம். அனைத்துப்போட்டிகளும் (தடகளம், விளையாட்டு மற்றும் படிப்பு சம்மந்தபோட்டிகளும்) இல்லங்களுக்கு இடையில் தான் நடக்கும்.
அதைவிட எங்களுக்கு விளையாட்டு நேரத்தில் (மாலை 4:00 PM to 6:00 PM) உடுத்துவதற்கு என்று ஒரு உடை இருக்கும் (சைனிக் பள்ளியில் ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு யூனிஃபார் உண்டு). அது இல்லத்துக்கு ஏற்ப ஒரு நிறத்தில் இருக்கும். நானும் என் இல்லத்தவரும் எங்களுக்கு உரிய கரு நீல உடையில் விளையாட்டு மைதானத்தில் விளையாடிகொண்டோ அல்லது திரிந்துகொண்டிருப்போம்.
விளையாட்டு நேரத்தில் வகுப்பறையிலோ, விடுதியிலோ அனுமதி இல்லைங்க.. கண்டிப்பாக எங்காவது போய் எதாவது விளையாடிக்கொண்டு இருக்கவேண்டும்.
<>இயற்கையாகவே சைனிக் பள்ளி மாணவர்களுக்குள் எப்போதும் தீவிர ‘இல்லப் பற்று’ நிலவும். விளையாட்டுப்போட்டிகளின் போது நாங்கள் எங்கள் இல்லத்து டீம்களை உற்சாகப்படுத்தும் போது பார்க்கவேண்டுமே….
இப்போதுகூட எங்காவது எங்கள் பள்ளி முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்தால்், அறிமுகப்படுத்தும் போதும் எந்த இல்லத்தினைச் சார்ந்தவன் [உதா: Mugunth from Chera house ] என்று அறிமுகப்படுத்துவார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுகளேன்.
எங்கள் பள்ளியில் படித்த மாணவரிடையே இயற்கையாகவே காணப்படும் team mentality உருவாக உதவியது இதுதான் என்று நினைக்கிறேன்.
Posted by mugunth on 03 Sep 2004 | Tagged as: பொது
அன்மையில் ஈராக்கில் நேப்பாள் நாட்டு தொழிலாளர்களை தீவிரவாதிகள் கொன்ற சன் தொலைக்காட்சியில் அப்பட்டமாக பார்க்கும் துர்பாக்கியம் எனக்கு கிடைத்தது. மனிதனை ஆடு அறுப்பதுபோல் அறுக்கிறார்கள் அதை அப்படியே ஒரு பொதுசன தொலைக்காட்சியில் காட்டித்தொலைக்கிறார்கள். எனக்கே சகிக்கவில்லை. நல்லவேளை அந்த நேரத்தில் எங்கள் வீட்டில் குழந்தைகள் யாரும் அப்போது இல்லை.
இதுபற்றி இணையத்து நண்பர் நாமக்கல் ராஜாவிடன் மறுநாள் குறிப்பிட்டதற்கு அவர் சொன்னார். நாங்க தொலைக்காட்சியில இது போல் பல கொலைகளை பார்த்துட்டோங்க என்று சாதாரணமாக பதிலளித்தார்.
இப்படிப்பட்ட கொடுரமான காட்சிகளை ஏன் இப்படி அயோக்கியத்தனமாக இந்தத் தொலைக்காட்சிகள் காட்டுகின்றன? இப்படிப்பட்ட காட்சிகளை தொடர்ந்து காட்டினால் தமிழன் மனதில் வன்முறை வளராமல் வேறு என்ன வளரும். ஊடகங்களின் இத்தகைய பொருப்பற்ற தன்மையை கண்டிக்க வழியில்லையா?