August 2004

Monthly Archive

இந்தியாவின் முதல் குறைந்த விலை விமானசேவை!

Posted by mugunth on 25 Aug 2004 | Tagged as: பொது

இன்றைய ஒரு செய்தி என்னை மிகவும் கவர்ந்தது. இந்தியாவிலும் குறைந்தவிலை விமான சேவை ஆரம்பித்துவிட்டது!
பார்க்க: http://in.rediff.com/money/2004/aug/25deccan.htm
வரவேற்கப்படவேண்டிய வரலாற்று நிகழ்ச்சி. இனி விமானத்தில் யாரும் பயனம் செய்யும் நிலை வந்துவிட்டது!!!

இனி மேல் விமானங்களின் காலமாகத்தான் இருக்கப்போகிறது. இதுபோல் குறைந்தவிலை விமானங்கள் பல வரவேண்டும்.

அதே போல் ஒரு தமிழனும் இதுபோல் ஒரு விமான சேவையினைத்துவக்கி… தமிழில் விமானத்தின் பெயரை எழுதி, தமிழில் அறிவிப்புகளை கொடுத்து… தமிழின்-தமிழனின் புகழைப் பரப்பும் நாள் எந்த நாளோ…………
இன்றையக் கனவுகள் தானே நாளைய நிஜங்கள்… வானமும் தமிழனின் வசப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை!

சுதந்திரதினத்திற்கு முன் ஒரு கொடுமை அரங்கேற உள்ளது!

Posted by mugunth on 12 Aug 2004 | Tagged as: பொது

திட்டமிட்டு நாள்/நேரம் குறித்து ஒரு மனித உயிரை(அவன் என்னதான் தவறு செய்திருந்தாலும்) கொலை செய்யும் கொடுமை இன்னம் சில மணி நேரத்தில் புத்தனும் காந்தியும் பிறந்த புனித மண்ணில் நடைபெற உள்ளது.
[பார்க்க: http://www.rediff.com/news/2004/aug/10kolkata.htm
இதையும் பாருங்கள்:� http://in.rediff.com/news/2004/aug/12dhan.htm ]

இக்கொடுமை 100 கோடி மக்களின் சார்பாக உள்ள சட்டத்தின் அங்கீகாரத்துடன் நடைபெற உள்ளது. இதை விட கேவலம் மனித குலத்திற்கு வேறெதுமில்லை!

இழவுக்கு வந்திருப்பவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறான் , பிணமாக போகிறவன், என்னக் கொடுமை இது (

நாம் வாழ்வது கணினி யுகமுமில்லை, ஒரு வெங்காய யுகமுமில்லை. காட்டுமிராண்டிகளின் யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

[தகவலுக்கு: மரணதண்டனையை ஒழித்துவிட்ட நாடுகளின் ஒரு பட்டியல் கீழே…

வருடம்- நாடு
============
1976 Portugal
1978 Denmark
1979 Luxembourg, Nicaragua, Norway
1981 France, Cape Verde
1982 Netherlands
1985 Australia
1987 Haiti, Liechtenstein, German Democratic Republic
1989 Cambodia, New Zealand, Romania, Slovenia
1990 Andorra, Croatia, Czech & Slovak Federal Republic,Hungary, Ireland, Mozambique, Namibia, São Tomé, Principe
1991 Slovenia, Croatia
1992 Angola, Switzerland
1993 Greece, Guinea-Bissau, Hong Kong
1994 Italy
1995 Mauritius, Moldova, Spain
1996 Belgium
1998 Bulgaria, Lithuania
1999 Bermuda
2000 Poland
2001 Chile
2002 Serbia, Yugoslavia, Cyprus. ]

நளினம் - விரைவில் பரிநிரலாக மாறவிருக்கிறது!

Posted by mugunth on 04 Aug 2004 | Tagged as: கணிணி

நேற்று இரவு தமிழ் பரி/திறவூற்று உலகில் ஒரு மகத்தான மாற்றத்திற்கான அடித்தளம் இடப்பட்டது. தமிழ் கணினித்துறையில் முன்னோடி செயலிகளில் ஒன்று நளினம். பார்க்க: http://nalinam.com

நளினம் செயலியைக்கொண்டு பலர் தமிழை கணினிகளில் பாவித்து வருகிறார்கள். இதனை உருவாக்கியவர் மலேசியாவைச் சார்ந்த நண்பர் சிவகுருநாதன். தமிழ் மீதும் தமிழர் மீதும் அளவில்லா அக்கரை கொண்டவர். தற்போது அவர் அமெரிக்காவில் வசிக்கிறார். விரைவில் ஆஸ்திரேலியாவிற்கு செல்லவிருக்கிறார்.

கடந்த வருடம் இவர் மலேசியாவில் இருந்தபோது அவரின் நட்பு எனக்கு கிடைத்தது. அப்போது இருந்தே அவரின் நளினம் செயலியை பரி/திறவூற்றுச் செயலியாக ஆக்கச் சொல்லி கேட்டுவந்துள்ளேன் (நச்சரித்து வந்தேன் என்றுதான் சொல்லவேண்டும்). நேற்று அவரை யாகூத் தூதுவன் வழி சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது ஒரு வழியாக அவரின் நளினத்தை பரிநிரலாக மாற்ற சம்மதித்துள்ளார். அதன் மூலநிரல் அனைத்தையும் என்னிடம் அனுப்பிவைத்துள்ளார். இனி அவற்றை சோதனை செய்து, சரியாக பரிநிரல் காப்புரிமை இட்டு வலையேற்றவேண்டும். அவருடன் சேர்ந்து இப்பணியை விரைவில் முடிக்கமுடியும் என்று நம்புகிறேன்.

அவரின் பல வருட உழைப்பை தமிழர்க்கு வழங்க முன்வந்திருக்கும் செயலை தமிழுலகம் பாராட்டவேண்டும்.

ஒரு புகழ்பெற்ற தமிழ் செயலி திறவூற்றாக மாற்றப்படுவது இதுவே முதல்முறையாக இருக்கப்போகிறது!