July 2004

Monthly Archive

காமராஜ் திரைப்படம் - என் பார்வையில்…

Posted by mugunth on 07 Jul 2004 | Tagged as: பொது

இன்று அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு சும்மா சுற்றுவதென்று காலையிலேயே முடிவு செய்துவிட்டேன். ஒரு மாற்றத்திற்குத் தான்- மேலும் நிறைய லீவு வேற பயன்படுத்தாமல் பாக்கி இருக்கிறது எனக்கு ;).� மேலும் இன்னைக்கு எந்த மீட்டிங்கும் இல்லை மற்ற அலுவலக வேலைகளை நண்பர்கள் கவனித்துக்கொள்ள முடியும் ஆகையால் நான் போகாமல் இருந்தால் ஒன்றும் பாதகமில்லை…

அலுவலக நண்பருக்கு தொலைபேசியில் அழைத்து இன்னைக்கு அலுவலகம் வரமாட்டேன் sick leave சொல்லிடு என்று சொல்லிவிட்டு மீண்டும் படுத்து உறங்கிவிட்டு மணி 11:00க்கு எழுந்தேன். நண்பர் கணேசன்(http://www.ryze.corm/go/PropertyAgent ) மதிய உணவு சாப்பிட ஏற்கணவே கூப்பிட்டு இருந்தார். அவருக்கு தொலைபேசியில் மணி 12.30 க்கு அவர் அலுவலகத்திற்கு வருவதாகத் தெரியப்படுத்திவிட்டு புறப்பட்டு சென்றேன்.

கணேசனின் அலுவலகம் இருக்கும் அதே அலுவலகத்தில் தான் நண்பர் டேவிட் ஆனந்தின் (http://www.ryze.com/go/davidananth ) அலுவலகமும் இருக்கிறது. அவர் தான் அன்மையில் பார்த்த காமராஜ் என்ற படத்தைப்பற்றி ரொம்ப சிறப்பாக சொல்லிக்கொண்டிருந்தார். அவரிடமிருந்து அந்த சிடியை டேவிட்டிடம் இருந்து பெற்றுக்கொண்டு, மதிய உணவை முடித்துக்கொண்டு வீடு திரும்பினேன்.

படத்தை என் கணினியில் பார்த்தவுடன் இதன் தயாரித்தவர்களுக்கு ஒரு கோடி நன்றி சொல்ல வேண்டும் என்றுதான் தோன்றியது. மிகவும் தரமாகப் படத்தை எடுத்து காமராஜரையும் உள்ளது உள்ளபடி அருமையாகக் காட்டியுள்ளார்கள்.

காமராஜரை இயக்கிய எண்ணங்களை அழுத்தமாக காட்டியிருக்கிறார்கள்,� குறிப்பாக அவரை இயக்கிய ‘கல்வியை அனைவருக்கும் அளிக்கவேண்டும்’ மற்றும் ‘வறுமையைப்போக்கவேண்டும்’ என்ற தீவிர சிந்தனையை இந்தப் படம் பார்க்கும் எவரும் உணரமுடியும்.

தமிழகத்தைப்பற்றியும் அதன் வரலாற்றைப்பற்றியும் அதிகம் தெரியாத, அல்லது தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லாத மலேசியத் தமிழராகிய டேவிட் போன்றோரையும் இந்தப் படம் கவர்ந்துள்ளது என்றால், அதுதான் இந்தப்படத்தின் வெற்றி என்று சொல்லலாம். { பெரும்பாலான மலேசிய மற்றும் சிங்கைத்தமிழர்களுக்கு (அதாவது தற்போதைய இளையத் தலைமுறைக்கு) தமிழகத்தின் வரலாறு தெரியாது என்பதை தமிழகத் தமிழர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் }

இப்படத்தில் சிலக்காட்சிகள் மனதில் நிற்கின்றன,
1. சாரயம் விற்றதற்காக போலீஸ் பிடித்துச் சென்ற� தன் கணவரை வெளியேவிட கோரும் பெண்னிடம் கடுமையாக பேசும் காமராஜரும், பிறகு காரில் போகும்போது அந்த பெண்ணின் குரலும், அவள் கையில் இருந்த குழந்தையின் கதறலும் காமராஜரின் நினைவுக்கு வரும்படிக் காட்டப்பட்ட காட்சி அருமையாக காமராஜரின் குணத்தைக் காட்டும்படி இருந்தது.

2. கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதற்காக இந்திராகாந்தி மேல் நடவடிக்கை எடுக்கபோவதாக காமராஜர் அறிவத்ததைப்பற்றி இந்திராகாந்தியிடம் நிருபர்கள் ஒரு காட்சியில் கேட்பார்கள். அதற்கு who is kamaraj? என்பாரே பார்க்கலாம். இது உண்மையில் நடந்ததுதான் என்றாலும் படத்தில் அந்தகாட்சி மிக தத்ருபமாக காட்டப்பட்டிருக்கிறது. தமிழனாகிய காமராஜரை அவர் அலட்சியப்படுத்தியது, தமிழர் அனைவரையும் அலட்சியப்படுத்தியது போல் தான் எனக்கு பட்டது.

இங்கே, இந்திய வரலாற்றில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய வரலாற்றுப்பிழையும் ஒரு தமிழனாக என் மனதைத் தாக்கியது. who is kamaraj? என்று கேட்ட இந்திராவை பிரதமாராக ஆக்கியவரும் அதே காமராஜ்தான். அதற்காக டெல்லியில் இருந்து போராடுவதாகக் காமராஜரைக் காட்டும் போது அவர் image விஸ்வரூபமாக தெரிந்தது. அவரை தமிழரின் பிரதிநிதி என்று பார்த்தால் தமிழனின் image டெல்லியில் அப்போது பிரமாண்டமாகத்தான் (படத்தில் காட்டப்பட்டிருப்பது போல்) இருந்திருக்கம் என்று நிணைக்கிறேன்.
அந்த சமயத்தில் பிரதமர் பதவி காமராஜருக்கு வலிய வந்தது. அதை ஏன் புறந்தள்ளிவிட்டு இந்திராவைத் தேர்ந்தெடுத்தார்? அந்த சமயத்தில் காமராஜர் என்ற தமிழர் பிரதமாராக ஆகியிருந்தால் இந்தியத் தமிழனின் தலையெழுத்து கொஞ்சம் வேறுமாதிரியாக ஆகியிருந்திருக்கும் அல்லவா? ஏன் இந்த வரலாற்றுப்பிழை நடந்தது ?

3. இந்தப் படத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அருவருக்கத்தக்க முறையில் காட்டியுள்ளார்கள். இது ரொம்ப அநியாயம். மொழிப் போராட்டத்தை ஏதோ வன்முறைப்போராட்டம் போல் காட்டியிருக்கிறார்கள். இது இந்தப்படத்தின் மோசமான அங்கம்.
மேலும் ஏன் காமராஜரின் புகழ் கடைசிகாலத்தில் மங்க ஆரம்பித்தது என்பதை இந்தப் படம் சரியாகக் காட்டவில்லை.

மற்றபடி இது ஒரு சிறந்த திரைப்படம் என்றதான் சொல்வேன்,.
எல்லாத் தமிழனும் ஒருமுறையாவது,� நம் வரலாற்றில் நீங்காத இடம்பெற்ற காமராஜரைப்பற்றி இந்தத் திரைப்படத்தினை கண்டிப்பாகப் பார்க்கவேண்டும்.

ஒரு steamboat அனுபவம்…

Posted by mugunth on 04 Jul 2004 | Tagged as: வாழ்க்கை

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மலேசியாவில் கிடைக்கும் சீன உணவு வகைகளில் ஒன்றான ஸ்டீம்போட்டை சுவைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது ஒருவகை உணவு என்றுகூட சொல்லமுடியாது, இது உணவு உட்கொள்ளும் ஒரு வகை என்றுகூட சொல்லலாம்.
மூன்று வருடமாக மலேசியாவில் இருக்கும் நான் அன்றுதான் முதன் முதலாக அப்படி ஒன்று இருப்பதை கேள்விப்பட்டு , அனுபவித்தும் பார்த்தேன்.

இதன் சிறப்பு என்னவென்றால், நாமே வேண்டிய வகை மீன் மற்றும் மற்ற இறைச்சி வகைகளை எடுத்து சமைத்து சாப்பிட்டுக்கொள்ளலாம்! இது சீனாவின் சில பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த பழக்கம் என்று இணையத்தளங்களில் படித்திருக்கிறேன்்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை, கிரேக்க நண்பன் சீமோஸ் மற்றும் அவர் தோழி நோவமி மற்றும் பெங்களூரிலிருந்து தற்போது மலேசியா வந்திருக்கும் சுனில் என்ற திறவூற்றுச் சமூதாயத்தை சேர்ந்த நண்பரும் வெளியே சந்தித்து உணவருந்த செல்வது என்று முடிவு செய்தோம்.

அங்கு செல்வதற்கு முன்பு சீமோஸ் மற்றும் சுனில் எங்கள் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் காபிக்கடையில் சந்தித்து பேசிகொண்டிருந்தோம்.
சுனில் திறவூற்று சமூகவட்டத்தில் குறிப்பாக பெங்களூர் பகுதியில் மிகவும் அறியப்பட்ட நபர். அவர் மகித்தி என்ற நிறுவணத்தை நடத்தி வருகிறார். அதே போல் சீமோஸ் கிரேக்க மொழி திறவூற்று சமூகத்திற்கு பெரும் பங்களிப்பு செய்து கொண்டிருப்பவர். தற்போதைய திறவூற்று மென்பொருட்களின் நிலவரம் குறித்து கதைத்துக்கொண்டு இருந்தோம்.

சற்று நேரத்தில் சீமோஸின் தோழி நோவமியும் எங்களுடன் சேர்ந்து கொள்ள , அங்கிருந்து LRT ரயிலைப்பிடித்து கிளானாஜெயா என்ற இடத்திற்கு புறப்பட்டோம்.

அங்குள்ள ஒரு புகழ்பெற்ற உணவு விடுதியில் எங்கள் ஸ்டீம்போட் உணவை தயாரித்து உண்ண ஆரம்பித்தோம். ஒரு ஆளுக்கு 16.80 ரிங்கட் விலை. வேண்டிய அளவு மீன், முட்டை, நூடுல்ஸ் மற்றும் இறைச்சிகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் எடுத்த அனைத்தையும் சாப்பிட்டுவிட வேண்டும். வீணாக்கினால், 100 கிராம் மீதம் வைத்த உணவு பண்டத்திற்கு 5 ரிங்கட் அபராதமாக கட்டவேண்டும் !

மீன், தௌஃபு(சோயா மொச்சையினால் தயாரிக்கப்பட்ட ஒரு சீனத்து பண்டம்) கொஞ்சம் நூடுல்ஸ் என்று நான் தேர்தெடுக்க, மற்ற நண்பர்கள் கோழி, ஆடு என்று நிறைய எடுத்து வந்தார்கள். அனைத்தையும் டேபிலில் பொருத்தப்பட்ட அடுப்பில் வைத்து வேகவைத்து உண்ண ஆரம்பித்தோம். அங்குள்ள இறைச்சிகள் அனைத்தும் வேகவைக்க தயாராக நன்றாக marinate செய்யப்பட்டு வைத்திருந்தார்கள்.

ஒன்றாக சேர்ந்து பேசிக்கொண்டே உணவுவகைகளை வேகவைத்து சாப்பிட்டு முடிக்க ஆண 2-3 மணி நேரம் போனதே தெரியவில்லை. நண்பர்கள் குழுவாக சென்று சாப்பிட மிகவும் சிறந்த தேர்வாக அமையும் இது.

மலேசியா வரும் நண்பர்களே யாரும் ஒரு முறையாவது ஸ்டீம்போட் சாப்பாட்டை ரசிக்காமல் சென்றுவிடாதீர்…

அன்று எடுத்த சில படங்களை சீமோஸ் அனுப்பிவைத்தார். இதோ உங்கள் பார்வைக்கும்…


மலேசியாவில் ஓடும் LRT இரயிலின் தோற்றம்
(உலகிலேயே அதிக தூரம் தானியங்கியாக அதாவது ஓட்டுனர் இல்லாமல் ஓடும் LRT இது தான் என்று இங்கு சொல்வார்கள்)


ஸ்டீம்போட் உணவுத் தயாரிப்பில் மும்மரமாக…



முதல் ரவுண்ட் முடிந்து அடுத்த ரவுண்டுக்கு மீண் மற்றும் தௌஃபு வேகவைக்கப்படுகிறது…

உணவை டூரியன் பழத்தின் சுவைகொண்ட ஐஸ்கிரீமுடன் முடிவுக்குக் கொண்டுவந்தோம்…
( என் ஒருகையில் ஐஸ்கிரீம் இன்னொரு கையில் எனக்குப் பிடித்த சூடான சீனத்து தேத்தண்ணீர் கோப்பை இருப்பதை போட்டோவைப்பார்த்த பிறகுதான் கவனித்தேன்! )


என் அலுவலத்திற்கு சென்று அங்கு இருக்கும் எனது காரை எடுக்க போக இரயில் நிலையம் வந்தால் , கடைசி இரயிலும் கிளம்பி விட்டிருந்தது… டாக்ஸி பிடிக்க செல்லும் முன் இரயில் நிலையத்திலேயே ஒரு படத்தினை அனைவரும் எடுத்துக்கொண்டோம்.
[படத்தில் சீமோஸ், நோவமி(சீமோஸின் தோழி), சுனில் மற்றும் நான் ]

தமிழிசைப்பாடும் முதல் ஆப்ரிக்கரின் மனவருத்தம்…

Posted by mugunth on 01 Jul 2004 | Tagged as: பொது

தென்ஆப்ரிக்க ஜுலு இன இளைஞன் தமிழிசையை (ஆம்… தமிழனுக்குச் சொந்தமான , தமிழிசையை, கர்நாடக இசை என்ற தவறான பெயரில் நான் அழைக்க விரும்பவில்லை ) கற்று தேர்ந்துள்ள செய்திக்குறிப்பை இன்று பிபிஸி வலைத்தளத்தில்் கேட்டேன்.
இந்தச் சுட்டியில் இருந்து நீங்கள் கேட்கலாம்: http://www.bbc.co.uk/tamil/040606_music_patrick.ram

தமிழ் இசையை ஆர்வத்துடன், செலவு செய்து சென்னையில் வந்து தங்கி ஜேசுதாஸிடம் கற்று தேர்ந்து தென்ஆப்பரிக்கா திரும்பிய பேட்ரிக்கிற்கு , தென்னாப்பரிக்க வாழ் தமிழரே ஆதரவு தராதது வருத்தமான செய்திதான்.

அன்றாட குடும்பச்செலவுகளுக்கு வாடகைக்கார் வைத்திருப்பதாக சொல்கிறார். தமிழர்களே! ஒரு வேண்டுகோள் , நம் கலைகள் வாழ வேண்டும். அதற்கு கலைகளைக்கற்ற கலைஞர்களை நாம் ஆதரிக்க வேண்டும்.
தமிழனின் கலையை ஆர்வத்துடம் கற்க வந்த பேட்ரிக்களின் கவலைப் படும் நிலையில் நாம் விடவேண்டுமா? தென்னாப்பரிக்க வாழ் தமிழர்கள் தான் பதில் சொல்லவேண்டும்.