கணிணி

Archived Posts from this Category

பயர்பாக்ஸ் தமிழில் !

Posted by mugunth on 17 Feb 2005 | Tagged as: கணிணி

பலநாள் போராட்டத்திற்குப் பிறகு இன்று மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் செயலியைத் தமிழ்படுத்துவதில் ஓரளவு வெற்றிகிடைத்தது.

இதை செம்மைப்படுத்தி முறையாக விரைவில் தமிழ் சமுதாயத்திற்கு அறிவிக்கிறேன்.அதற்கு முன் தற்போது உள்ள மொழிப்பொட்டலத்தை (எச்சரிக்கை: பிழைகள் இருக்க நிறைய வாய்ப்பு உள்ளது) சோதித்து பார்க்க விரும்புவோர் இங்கிருந்து [ http://thamizha.com/developer/mozilla/ta-IN-ff.xpi ] தமிழ் மொழி பொட்டலத்தை இறக்கிக்கொள்ளலாம்.

ஃபயர்ஃபாக்ஸ் கொண்டு இறக்கினால் தானாகவே நிறுவ வேண்டுமா என்று கேள்விகேட்கும். ஆம் என்று சொல்லி நிறுவிக்கொள்ளலாம். அல்லது உங்கள் கணினியில் ta-IN-ff.xpi கோப்பைச் சேமித்து விட்டு, ஃபயர்ஃபாக்ஸை திறந்து, file –> openfile மெனுவைக் கொண்டு இப்பொட்டலத்தை நிறுவிக்கொள்ளலாம்.

வேலூர் ஒரு பரிநிரல் விழா! -1

Posted by mugunth on 09 Feb 2005 | Tagged as: கணிணி

அன்மையில் சென்னை லினக்ஸ் பயன்படுத்துவோர் மடற்குழுவின் மூலம் மதிப்புக்குரிய திரு ரிச்சர்ட் ஸ்டால்மேன் தமிழகம் வருவதை அறிந்தேன். வேலூர் தொழில் நுட்பக்கல்லூரியின் ஜெர்மன் மொழி விரிவுரையாளராக இருக்கும் திரு அன்பு அவர்களின் அறிமுகமும் அண்மையில் கிடைத்திருந்தது.

கடந்த சனிக்கிழமை 8 மணிவாக்கில் சென்னை விமான நிலையத்திற்கு ஆர்.எம்.எஸ் அவர்கள் கல்கத்தாவில் இருந்து வந்து சேருவதாக இருந்தது. 8 மணிவாக்கில் சென்னை விமான நிலையம் சென்றுவிட்டேன். கல்கத்தாவில் இருந்து திரு ஆர்.எம்.எஸ் வரும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் அரைமனி நேரத்திற்குமேலாக தாமதமாக வரும் என்று தெரிந்தது.

சற்று நேரத்தில் திரு அன்பு மற்றும் அவர் கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளர்களும் வந்து சேர்ந்தார்கள். அவர்களுடன் திரு ஆனந்தபாபுவும் வந்திருந்தார். உலகிலேயே 2வது வேகமாக செயல்படும் ‘தன்டர்’ என்னும் அதிவேக கணினியை(super computer) பரிநிரல்களைக் கொண்டு வடிவமைத்தவர்தான் இந்த ஆனந்தபாபு. மேலும் குனூ பரிநிரல் திட்டத்தின் முழுநேர ஆர்வலராகவும் பல பரிநிரல் திட்டங்களை பராமரிப்பவராகவும் இருக்கிறார்.

சற்றுநேரத்தில் சென்னையிலுள்ள குனூ பரிநிரல் ( GNU Free Software)ஆர்வலர்கள் சிலரும் வந்து சேர்ந்தார்கள்.

[ஆர்.எம்.எஸ் வருகைக்காக காத்திருக்கும் பரிநிரல் ஆர்வலர்கள்…]

அனைவரும் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டு காத்திருக்கையில் , சரியாக 9:20 க்கு கல்கத்தா விமானம் சென்னையில் இறங்கியது. நாங்கள் பயனிகள் வெளியேரும் வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தோம். சரியாக 9:45 மணிக்கு பரிநிரல் சித்தாந்தத்தை உலகிற்கு அளித்து, மென்பொருள் உருவாக்கத்தில் மாபெரும் புரட்சியை படைத்த சித்தாந்தவாதியான ஆர்.எம்.எஸ் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தார்.

பிறகு ஆர்.எம்.எஸ் அவர்கள், பரிநிரல் ஆர்வலர்கள் திரு நாகார்ஜூன், திரு ராமன்ராஜ் ஆகியோருடன் ஒரு காரில் வேலூரைநோக்கி கிளம்ப, நான், அன்பு, ஆனந்தபாபு , சென்னையைச் சார்ந்த ஆர்வலர் திரு முத்து மற்றும் வேலுர் தொழில்நுட்பக்கல்லூரியைச் சார்ந்த நண்பர்களுடன் ஒரு வேனில் கிளம்பினோம்.
[தொடரும்….]

கைகொடுத்த லினக்ஸ் !

Posted by mugunth on 04 Nov 2004 | Tagged as: கணிணி

நேற்று அலுவலக்த்தில் என் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தில் இயங்கும் கணினி திடீரென்று படுத்துவிட்டது. என்ன காரணம் என்று புரியவில்லை கணினி திறக்க(boot ஆக) மறுத்தது. வேலை அதிகம் இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு சோதனையை எதிர்பார்க்கவில்லை.

இதனை சரி செய்ய நினைத்து, இயங்குதளத்தின் குறுந்தட்டை எடுத்துவந்து அதிலுள்ள repair் modeஇல் இயக்கிப்பார்த்தேன். ஒன்றும் சரிபடவில்லை.

விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை, வட்டிலுள்ள சொந்தக் கோப்புகளை அழிக்காமல், மீண்டும் ஒருமுறை நிறுவிப்பார்த்துவிடலாம் என்று முயற்சி செய்தேன். ஆனால் வட்டிலுள்ள கோப்புகளை அழித்துவிட்டுத்தான் மறுமுறை நிறுவ விடுவேன் என்று எக்ஸ்பி இயங்குதளம் அடம் பிடித்தது.

அலுவலகவேலையின் முக்கியக் கோப்புகளனைத்தையும் காப்பாற்றியாகவேண்டியக் கட்டாயத்தில் இருந்தேன்.

வன்தட்டை கழற்றி எடுத்து இன்னொரு கணினியுடன் பொருத்தி கோப்புகளை வெளியே எடுப்பது என்று சுலபமான காரியமில்லை.

என்ன செய்வது என்று யோசிக்கையில் லினக்ஸ் இயங்குதளத்தில் விண்டோஸின் வட்டுக்களை(NTFS வகையில் இருக்கும் வட்டுகளையும்) பார்வையிட முடியும் என்பது நினைவில் வந்தது.

தற்போது என்னிடம் லினக்ஸ் குறுந்தட்டுக்கள் எதுவும் அலுவலகத்தில் வைத்திருக்கவில்லை.
உடனே பக்கத்திலுள்ள தெரிந்த கணினி வன்பொருள் கடையில் ஒரு நாபிக்ஸ் லினக்ஸ் குறுந்தட்டை வாங்கிகொண்டு வந்தேன். இந்த நாபிக்ஸ் லினக்ஸை வன்தட்டில் நிறுவாமலே நம் கணினியின் குறுதட்டிலிருந்தே இயக்கலாம்.
அதாவது குறுந்தட்டை கணினியில் பொருத்தி மீளத்தொடங்கினால் உங்கள் கணினி லினக்ஸில் இயங்குவதைப் பார்க்கலாம்.

மேலே குறிப்பிட்ட மாதிரி என் “விண்டோஸால் கைவிடப்பட்ட” கணினியை, நாபிக்ஸ் லினக்ஸ் மூலமாக உயிர்த்தெழ செய்தேன். கணினி லினக்ஸ் மூலமாக இயங்க ஆரம்பித்தவுடன் அதனை எங்கள் அலுவலக LAN வலைக்குள் கொண்டுவந்தேன். ( IP எண்னை சரியாக மாற்றி அமைத்தானே போதும்.)
பிறகு நாபிக்ஸ் லினக்ஸில் உள்ள சம்பா வழங்கியை (samba server) முடுக்கிவிட்டேன். சம்பா வழங்கி என்பது லினக்ஸ் கணினியின் கோப்புகளை, அதே LAN வலைக்குள் உள்ள மற்ற விண்டோஸ் கணினிகள் பார்க்க வழிவகுக்கும்.

உடனே பக்கத்துக் (விண்டோஸ்) கணினிக்கு என்று என் லினக்ஸ் கணினியின் ip எண் கொண்டு திறக்கையில் , பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லைப் பெற்றுக்கொண்டு, லின்க்ஸ் கணினியில் உள்ள அனைத்து வட்டுக்களையும் மற்றும் கோப்புகளையும் **பழுதடைந்த விண்டாஸ் பயன்படுத்திய NTFS ்வவ வட்டு உட்பட** திறக்க முடிந்தது.
உடனே அனைத்துக்கோப்புகளையும் பாதுகாப்பாக இன்னோரு கணினியில் பிரதி எடுத்து கொள்ள முடிந்தது. பிறகு விண்டோஸ் இயங்குதளத்தை அழித்து மீண்டும் நிறுவிக்கொண்டேன்.

விண்டோஸ் காலை வாரினாலும் தக்க சமயத்தில் லின்க்ஸ் கைகொடுத்தது. வாழ்க லினக்ஸ்!

அலுவலகத்தில் விண்டோஸ் பயன்படுத்தும் நண்பர்களே உங்கள் கையில் எதற்கும் ஒரு நாப்பிக்ஸ் போன்ற ஒரு லினக்ஸ் குறுந்தட்டு இருக்கட்டும்! ஒரு நாள் அதன் தேவை, விண்டோஸ் புண்ணியத்தில் உங்களுக்கும் வரலாம் ;)
்பிஇ

இந்தவாரத்தில் இரண்டு நற்செய்திகள் !

Posted by mugunth on 17 Oct 2004 | Tagged as: கணிணி

இந்தவாரத்தில் தமிழ் திறவூற்று உலகில் இரண்டு குறிப்பிடதக்க விசயங்கள் நடந்தது (குறைந்தபட்சம் என்பார்வைக்கு எட்டியவரையில்).
1. தமிழ் ஒப்பன் ஆபீஸ் மொழிபெயர்ப்புக்கோப்புக்கள் அனைத்தும் எளிதான .po வடிவத்திற்கு் மாற்றப்பட்டது!
2. மயூரன் தமிழ் கையெழுத்துணரி மென்பொருளினை அறிவித்தார்!
இவற்றைப்பற்றி என் எண்ணங்கள்….

முதலாவது => தமிழ் ஒப்பன் ஆபீஸ் மொழிபெயர்ப்புக்கோப்புக்கள் அனைத்தும் .po வடிவத்தில் மாற்றப்பட்டது.

ta.openoffice.org மடற்குழுவிலுள்ள இந்த மடலைப்பார்க்கவும்: http://ta.openoffice.org/servlets/ReadMsg?list=discuss&msgNo=71
ஓப்பன் ஆபீஸ் மொழிபெயர்ப்பு கோப்புகள் சாதாரண பயணர்கள் எளிதில் கையாலமுடியாதபடி புதிய வடிவில் இருக்கும். அதனால் ஓப்பன் ஆபீஸ் மென்பொருளை மொழிமாற்றம் செய்வது கடினம். இதுவரை ஒப்பன் ஆபீஸ் தமிழ் மொழிபெயர்ப்பை பெங்களுர் பாரதீயோ குழுவைச்சார்ந்த வல்லுனர்கள் செய்து அதன் கோப்புகளை (ஓப்பன் ஆபீஸின் GSI வடிவில்) ஓ.ஆ. சமூகத்திற்க்கு கொடையாகக் கொடுத்திருந்தனர். அந்தக் கோப்புகளையும், அறிவிப்பையும் இங்கே காணலாம்: http://ta.openoffice.org/issues/show_bug.cgi?id=30428

அந்த மொழிபெயர்ப்புக் கோப்புகளை எளிதில் கையாளக்கூடிய வகையில் .po வடிவில் மாற்றவேண்டும் என்று பலரின் உதவியை நாடினேன். கடைசியில் http://translate.sourceforge.net/ குழுவினரின் உதவியுடன் அது சாத்தியமாயிற்று. இக்குழுவின் Dwayne Bailey மற்றும் David fraser ஆகியோர் என் வேண்டுகோளுக்குப் பிறகு மாற்றிக்கொடுத்தனர்.

தற்போது .po வடிவில் தமிழ் ஓப்பன் ஆபீஸ் பதிப்பு 1.1.3 இன் மொழிக்கோப்புக்கள் இந்த வலை சுட்டியில் http://prdownloads.sourceforge.net/translate/OOo-1.1.3m47-Tamil-po.tar.bz2?download பதிவிறக்கிக் கொள்ளலாம்.

இதனை poedit என்ற எடிட்டரைக் கொண்டு எளிதில் மொழிபெயர்க்கலாம். விண்டோஸ் கணினிக்கான poedit ஐ http://poedit.sourceforge.net/ என்ற சுட்டியில் இறக்கிக்கொள்ளலாம்.

தமிழ் ஓப்பன் ஆபீஸ் 1.1.3 பதிப்பை தமிழில் சிறப்பாக, மொழிபெயர்ப்புப் பிழைகள் இன்றி வெளியிட ஆர்வமுள்ளவர்கள் உதவவேண்டுகறேன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:
1. poedit ஐ http://poedit.sourceforge.net/ என்ற சுட்டியில் இறக்கிக் நிறுவிக்கொளுங்கள். முக்கியக் குறிப்பு: உங்கள் கணினி விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விண்டோஸ் 2000 ஆகத்தான் இருக்கவேண்டும். ஏனேன்றால் நாம் ஓப்பன் ஆபீஸில் கையாளுவது யூனிகொட் தமிழ்தான்.

2. பிறகு http://prdownloads.sourceforge.net/translate/OOo-1.1.3m47-Tamil-po.tar.bz2?download சுட்டியிலுள்ள கோப்புக்களை எடுத்து அதிலுக்க கோப்புகளை poedit மூலம் திறந்து அதிலுள்ள மொழிபெயர்ப்பின் பிழைகளைக்கழையலாம். அல்லது மொழிபெயர்க்கப்படாமல் இருக்கும் கோப்புக்களை மொழிபெயர்த்துக்கொடுக்கலாம்.
நீங்கள் மாற்றியக்கோப்புக்களை எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பவும்.

தற்போது இலங்கையிலிருந்து ராஜ்காந்த் என்பவரும் , பெங்களூர் உமா மகேஸ்வரனும், மற்றும் மலேசிய நண்பர் தினேஸ்ம் ஓப்பன் ஆபீஸ்மொழி 1.1.3 பெயர்ப்பில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர். விரைவில் மேலும் நண்பர்கள் கைகோர்ப்பார்கள் என்று நம்புகிறேன். நவம்பர் கடைசிவாரத்தில் இதனை முடிக்க முயற்சி செய்யவேண்டும் என்று எனக்குள் முடிவுசெய்துள்ளேன். எப்படி செயலாக்குவது என்று இனிதான் யோசிக்கவேண்டும்….

அடுத்த குறிப்படத்தக்க வளர்ச்சி => மயூரனின் தமிழ் கையெழுத்துணரி மென்பொருள்.
பார்க்க….
http://mauran.blogspot.com/2004/10/blog-post_12.html
http://mauran.blogspot.com/2004/10/blog-post_13.html

இது ஒரு அருமையான முயற்சி. இதனை சரியானபடி திட்டமிட்டு குழுவாக சேர்ந்து செயலாற்றினால், இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழனுக்கு சிறந்த திறவூற்று சாதனங்கள் பல உருவாக வாய்ப்பு உள்ளது. முதற்கட்டமாக இம்முயற்சியை பரி மற்றும் திறவூற்று திட்டமாக மயூரன் அறிவித்து sourceforge.net போன்ற தளங்களில் புதிய திட்டமாக தொடங்கலாம். அதன் பிறகு உலகெங்கிலும் உள்ள ஆர்வலர்களை இத்திட்டத்திற்கு ஈர்பது எளிதாக இருக்கும்.
மயூரனின் முயற்சி வெற்றியடையவும் அதன் மூலம் தமிழ் சமுதாயம் பயன் பெறவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

நியூக்ளியஸ் வலைப்பதிவின் குறை களைந்தது…

Posted by mugunth on 27 Sep 2004 | Tagged as: கணிணி

என் வலைப்பதிவு தமிழ் படுத்தப்பட்ட நியூக்கியஸ் செயலியைக்கொண்டு இயங்குகிறது. அதில் நீண்ட நாட்களாக செய்தியோடையில் பிரச்சனை இருந்துகொண்டே இருந்தது. அதைக்களையும் விதத்தை நண்பர் காசி அன்மையில் குமரகுரு அவர்கள் அனுப்பிய ஒரு மடலை எனக்கு முன்னனுப்பி தெரிவித்து குறைக்களைய உதவினார்.

நியூக்களியஸில் செய்தியோடைப் பிரச்சனையைத் தீர்த்துவைத்த மடல் இதோ உங்கள் பார்வைக்கும்… உங்களில் யாராவது நியூக்கிளியஸ் பயன்படுத்துவோர் இருந்தால், உங்களுக்கு இது கண்டிப்பாகப் பயனுள்ளதாக இருக்கும்.

என் வலைப்பதிவின் தமிழ் இடைமுகத்தைதின் படங்கள் சில… இதிலுள்ள சிறு சிறு குறைகளைக் களைந்தால், இந்த இடைமுகத்தை ஆங்கிலம் தெரியாத தமிழர்களும் எளிதாகப்பயன்படுத்தி வலைப்பதிவிட முடியும் என்று நான் நம்புகிறேன். இதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க…

வலைப்பதிவின் நிர்வாகப்பகுதி...

வலைப்பதிவின் நிர்வாகப்பகுதி...

வலைப்பதிவின் நிர்வாகப்பகுதி...

நளினம் - விரைவில் பரிநிரலாக மாறவிருக்கிறது!

Posted by mugunth on 04 Aug 2004 | Tagged as: கணிணி

நேற்று இரவு தமிழ் பரி/திறவூற்று உலகில் ஒரு மகத்தான மாற்றத்திற்கான அடித்தளம் இடப்பட்டது. தமிழ் கணினித்துறையில் முன்னோடி செயலிகளில் ஒன்று நளினம். பார்க்க: http://nalinam.com

நளினம் செயலியைக்கொண்டு பலர் தமிழை கணினிகளில் பாவித்து வருகிறார்கள். இதனை உருவாக்கியவர் மலேசியாவைச் சார்ந்த நண்பர் சிவகுருநாதன். தமிழ் மீதும் தமிழர் மீதும் அளவில்லா அக்கரை கொண்டவர். தற்போது அவர் அமெரிக்காவில் வசிக்கிறார். விரைவில் ஆஸ்திரேலியாவிற்கு செல்லவிருக்கிறார்.

கடந்த வருடம் இவர் மலேசியாவில் இருந்தபோது அவரின் நட்பு எனக்கு கிடைத்தது. அப்போது இருந்தே அவரின் நளினம் செயலியை பரி/திறவூற்றுச் செயலியாக ஆக்கச் சொல்லி கேட்டுவந்துள்ளேன் (நச்சரித்து வந்தேன் என்றுதான் சொல்லவேண்டும்). நேற்று அவரை யாகூத் தூதுவன் வழி சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது ஒரு வழியாக அவரின் நளினத்தை பரிநிரலாக மாற்ற சம்மதித்துள்ளார். அதன் மூலநிரல் அனைத்தையும் என்னிடம் அனுப்பிவைத்துள்ளார். இனி அவற்றை சோதனை செய்து, சரியாக பரிநிரல் காப்புரிமை இட்டு வலையேற்றவேண்டும். அவருடன் சேர்ந்து இப்பணியை விரைவில் முடிக்கமுடியும் என்று நம்புகிறேன்.

அவரின் பல வருட உழைப்பை தமிழர்க்கு வழங்க முன்வந்திருக்கும் செயலை தமிழுலகம் பாராட்டவேண்டும்.

ஒரு புகழ்பெற்ற தமிழ் செயலி திறவூற்றாக மாற்றப்படுவது இதுவே முதல்முறையாக இருக்கப்போகிறது!

தமிழ் யுனிகோடு கேள்வியும் - பதிலும் - 1

Posted by mugunth on 11 May 2004 | Tagged as: கணிணி

இன்று தமிழ் யுனிகோடு பயன்பாடு குறித்து அகத்தியர் மடற்குழுவில் திரு சுப்பிரமணியன் என்பவர் கேட்டிருந்தார். இது மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கலாம் என்று கருதி இங்கு இடுகிறேன்.
அவர் கேள்வியும் என் பதிலும்:

====அகத்தியர் மடற்குழு மடல் மேற்கோள் ஆரம்பம்====
>
>ஒருசில சந்தேகங்கள்.:
>
>(1) திசைகள் என்ற இணையதள இதழ் தமிழ்யூனிக் கோடு எழுத்துருவில் அமைக்கப் பட்டது என்று கூறப்படுகின்றது.
>அந்த இதழின் ஒரு பக்கத்தை நகலெடுத்து இன்க்ரீடி மெயில்லில் ஒட்டினால், படிக்கமுடிவதில்லை. நீண்ட
>சதுரங்கள் மட்டுமே நிற்கின்றன.குறளின் வைகைச் செயலியில் ஒட்டினால் படிக்கமுடிகின்றது. அதன் எழுத்துரு
>நிரலியில் பார்க்கும் போது திசைகளில் பயன்படுத்திய எழுத்துரு Inaimathi TSCu என்று தெரிகின்றது.
>
>அவ்வாறெனின் இணைமதி டிஎஸ்கியுவும் யூனிக் கோடு எழுத்துருவும் ஒன்றுதானா?
>
>

அன்புள்ள சுப்பிரமணியன் ஐயா,

நான் ‘இன்க்ரீடி மெயில்’ மற்றும் ‘வைகைச் செயலி’ இரண்டையும் பாவித்தது இல்லை. ஆகையால் இவ்விரண்டு செயலி சம்மந்தமாக உங்கள் சந்தேகங்களுக்கு பதிலளிக்க இயலவில்¨.

யுனிகோடு என்பது எழுத்துருக்கள் அமைக்கப்படும் ஒரு தரம் (standard) . யுனிகோடை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட தமிழ் எழுத்துருக்களில் எழுதப்பட்ட விசயங்களை இன்னொரு யுனிகோட் எழுத்துருக்கொண்டு படிக்கலாம்.

இங்கு Inaimathi TSCu எழுத்துரு ஒரு யுனிகோடு எழுத்துரு. இதில் எழுதப்பட்ட எழுத்துக்களை இன்னொரு யுனிகோடு எழுத்துருக் கொண்டு படிக்க முடியும்.

தமிழ் யுனிகோட் எழுத்துருக்களுக்கு வேறு உதாரணங்கள்;
1. TSCu_Paranar [ created and given free to the tamil community by a Tamil Teacher, Mr. Kalaimani of Singapore. ]
2. TheneeUni & ThendralUni fonts [ created and given free to the tamil community by Mr. A.Umar of Tamil Nadu. ]
3. aAvarangal [ created and given free to the tamil community by Sinnathurai Srivas - now lives in UK ]
4. TSCu_Kulasekaran & TSCu_Veeravel fonts [ created and given free to the tamil community by Muruga Pandian of Pudukottai ]
5. TSCu_Times & TSCu_Comic [ created and given free to the tamil community Thukaram Gopalrao ]
6. SooriyanDotCom [ created and given free by Jayatheepan Ulagapiragasam of Srilanka]
…….. (இன்னும் பல… )

மேலேயுள்ளப் பட்டியல் உள்ள எழுத்துரு சிற்பிகள் எல்லாம் தமிழ் கணினி சிறக்க முக்கியக்காரணமானவர்கள். அவர்கள் எல்லா வளமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துவோம்.

அடுத்தக் கேள்விக்கு வருவோம்..

திசைகள் மற்றும் அதுபோல் யூனிகோடில் இயங்கும் வேறு எந்த பத்திரிக்கையின் பக்கங்களை நீங்கள் உங்கள் கணினியில் சேமிக்க முடியும்.
1. நீங்கள் விண்டோஸ் 2000(windows 2000) அல்லது விண்டோஸ் எக்ஸ் பி (windowsXP) பாவித்தால் கீழேயுள்ளபடி செய்யலாம்.
=> திசைகள் பக்கத்தை அப்படியே வெட்டி , notepad இல் ஒட்டுங்கள் தமிழ் எழுத்துக்கள் நன்றாக தெரியும். அதனை யுனிகோடு பக்கமாக சேமித்து வைத்துக்கொள்ளலாம். [ file –> Save as –> while saving the document choose the encoding as ‘UTF-8′]

==> இன்னொரு முறை, வோர்ட் ஆவணத்தைத்தை திறந்து அதில் ஒட்டி சேமிப்பது. ( Copy paste the Thisaigal page in word document ,and save it )

2. நீங்கள் விண்டோஸ் 98 கணினியைப் பாவித்தால் மேலே உள்ள முறைகளைப் பாவிக்க முடியாது ஏனென்றால் விண்டோஸ் 98 இல் யுனிகோடுக்கு அதிக ஆதரவு கொடுக்கப்படவில்லை.
அதற்கு பதில் கீழேயுள்ள முறையை பயன்படுத்தவும்.

=> ‘LedIt! 3.0 Word Processor’ மற்றும் ‘LedLineIt! 3.0 Text Editor’ என்று இரண்டு இலவச செயலிகள் இருக்கின்றன. இவற்றை இந்த வலைச்சுட்டிகளில் இருந்து இறக்கிக்கொள்ளலாம்.
http://www.sophists.com/Led/LedLineIt/
http://www.sophists.com/Led/LedIt/

விண்டோஸ் 98 வைத்திருப்பவர்கள் யுனிகோடு தமிழை சுலபமாக பாவிக்க இச்செயலிகளில் ஒன்று மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
LedIt! அல்லது LedLineIt! செயலியைத்திறந்து அதில் திசைகள் யுனிகொடு எழுத்துக்களை ஒட்டி சேமிக்கலாம்.

யுனிகோட் தமிழில் தட்டச்சு செய்ய எ-கலப்பை 2.0b பதிப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும்.
எ-கலப்பை 2.0b ஐ http://www.developer.thamizha.com/ekalappai/ என்ற வலைச்சுட்டியிலிருந்து இறக்கிக்கொள்ளவும்.

குறிப்பு; எ-கலப்பை 2.0b நிறுவும் முன் உங்களிடம் ஏற்கணவே எ-கலப்பை 1.0 இருந்தால் அதனை நீக்கி விடவேண்டும்.

>யூனிக்கோடு எழுத்துருவினில் அகத்தியத்திற்கு மடலிட வழியுண்டா?
>
>
>
கண்டிப்பாக உண்டு.
கிட்டதட்ட அனைத்து மடல் செயலிகளும் யுனிகோடு ஆதரவை வழங்குகிறது. முக்கிய விதிவிலக்கு
யுடோரா மடற்செயலி. யுடோராவில் யுனிகொடு ஆதரவு இன்னும் வரவில்லை. நம் மடற்குழுவில்
இருப்பவர்கள் பலர் இன்னுமு யுடோராவைப் பாவிப்பவர்கள். அவர்கள் யுனிகொடு மடல்களைப்படிக்க முடியாது.
அவர்கள் வேறு நல்ல மடற்செயலியை பாவிக்க சம்மதித்தால் , நாம் யுனிகோடில் கருத்துப் பரிமாற்றம்
செய்ய எந்தப்பிரச்சனையும் இல்லை.

>சிறுபிள்ளைத்தனமான கேள்வியாக இருப்பினும் தக்கமறுமொழி கூறுங்கள். கணினி அறிவு மிகவும் சொற்பம்.
>
>
>
ஐயா, ‘கேள்விகள் என்னைக்கும் தவறாக இருக்க வாய்ப்பில்லை, அதற்கான பதில்கள்தான் தவறாக இருக்க
முடியும்’ ஆக, என் பதில்களில் ஏதும் தவறு இருந்தால் , தெரிந்தவர்கள் சுட்டிக்காட்டி உதவ வேண்டுகிறேன்.

அன்புடன்,
முகுந்தராஜ்

>அன்புடன், வெ. சுப்பிரமணியன்,
>

====அகத்தியர் மடற்குழு மடல் மேற்கோள் முடிவு====

« Previous Page