கணிணி

Archived Posts from this Category

மலேசியா இன்று - புதிய மலேசிய செய்தித்தளம்

Posted by mugunth on 25 Feb 2008 | Tagged as: பொது, கணிணி

மலேசியாவில் பிரபலமான செய்தித் தளமான மலேசியகீனி தற்போது தமிழிலும் தன் சேவையை தொடங்கியுள்ளது. தமிழில் தளத்தை இலவசமாக கொடுக்கிறார்கள்(ஆங்கிலத் தளத்திலுள்ள செய்திகளை படிக்க கட்டணம் உண்டு).

இதன் வலை முகவரி: http://www.malaysiaindru.com

தமிழ்ப்பதிவுகள் திரட்டி திறமூலமாக்கப்பட்டது.

Posted by mugunth on 31 Mar 2007 | Tagged as: கணிணி

தமிழ்ப்பதிவுகள் திரட்டியில் பயன்படுத்தும் மென்பொருளை மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் திறமூலமாக்கியுள்ளேன்.

இத்தளத்தில் இதை ஒரு தனிப் புரோஜக்டாக பதிந்துள்ளேன்.
http://code.google.com/p/tamilblogs/

தேவைப்படுவோர் இந்தச் செயலியைப் பயன்படுத்தி உங்களுக்கென தனியாக பதிவுகள் திரட்டியை அமைத்துக்கொள்ளலாம்.

அதேபோல் இச்செயலியை மேம்படுத்தவும் நீங்கள் உதவி செய்யலாம். இதற்கு நீங்கள் நிரலெழுதவேண்டும் என்று கட்டாயமில்லை.

கீழேயுள்ள மற்ற வழிகளில் நீங்கள் உதவி செய்யலாம்:

1. இச்செயலியிலுள்ள குறைகளை கண்டுபிடித்துச் சொன்னால் மேம்படுத்த உதவியாக
இருக்கும். இதற்கு இந்த செயலியை தனியாக நிறுவிப்பார்க்க வேண்டாம். தமிழ்ப்பதிவுகள் தளத்திலிலுள்ள குறைகளை சுட்டிக்காட்டினாலே போதும்.

2. இச்செயலியில் என்ன என்ன புது வசதிகளை கொடுக்கலாம் என்று உங்கள் கருத்துக்களையும் பதிவுசெய்யலாம்.
குறைகளை மற்றும் புது வசதிப் பற்றி தெரிவிக்க இந்த வலைச்சுட்டியைப் பயன்படுத்தலாம்: http://code.google.com/p/tamilblogs/issues/list

3. இச்செயலியைப் பயன்படுத்துவோர் பயன்படுக் கொள்ளத் தேவையான உதவி ஆவணங்களை தயாரித்து அளிக்கலாம்.

4. உங்கள் நண்பர்களிடம் இச்செயலியைப் பற்றி சொல்லலாம்.

கோவை நண்பர்கள் கவணத்திற்கு…

Posted by mugunth on 24 Jul 2006 | Tagged as: கணிணி

தமிழ்மணம்.காம் திரு.காசி கோவையில் 26-ஜூலை-2006 அன்று வலைப்பதிவுகளைப்பற்றி ஒரு கருத்தரங்கை நடத்த உள்ளார். வாய்ப்பு உள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
மேல் விபரங்களுக்கு காசியின் வலைப்பதிவைப் http://kasiblogs.blogspot.com/2006/07/seminar-on-blogs-at-csi-coimbatorehtml பார்க்கவும்.

குற்றங்களைக் காட்டும் இணையப்பக்கம்…

Posted by mugunth on 22 Mar 2006 | Tagged as: கணிணி

இன்று வலையை மேயும்போது http://www.chicagocrime.org என்ற ஒரு வலைப்பக்கம் என் கண்ணில் பட்டது.
இத்தளத்தில் சிகாகோ வட்டாரத்தில் நடந்த குற்றச்செயல்களை பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள்.

ஆனால் பட்டியலிட்டுவைத்தை ஒரு புதுமையாக நான் புதுமையாக சொல்லவில்லை. ஏற்கனவே இப்பட்டியல் வேறோரு வலைத்தளத்தில் அதாவது சிகாகோ காவல் துறையின் Citizen ICAM என்ற தளத்தில் உள்ளது. அப்படி என்றால் இத்தளத்தில் என்ன சிறப்பு என்று எண்ணத்தோன்றும்.

இத்தளத்தில் Citizen ICAM தளத்தில் உள்ள தகவலையும, கூகிள் வரைபடத்தள(google maps) சேவையையும் ஒன்று சேர்த்துள்ளார்கள். இதனால் குற்றம் நடந்த பகுதியை கூகிள் வரைப்படம் கொண்டு எளிதாக காண்பிக்கிறது இத்தளம்.

Image hosting by TinyPic

மேலும் இத்தகவல்களை பயனர், வீதி, காவல்துறை வளாகம், ஜிப் எண் போன்ற பலவகையில் தேடி குற்றச்செயல்களை கான http://www.chicagocrime.org தளத்தில் வழி செய்துள்ளார்கள்.

இது போன்ற தகவல்கள் கண்டிப்பாக ஒரு பகுதியில் வாழ்வோர்க்கு அல்லது புதியதாக அப்பகுதிக்கு போவோர்க்கு எச்சரிக்கையாக இருக்க உதவும். இதுபோன்ற ஒரு சேவையை தமிழகத்திலும் யாராவது ஆரம்பிக்கவேண்டும்.

செவ்வாய் கிரகத்தைப் பார்க்கலாம் வாங்க…

Posted by mugunth on 13 Mar 2006 | Tagged as: கணிணி

இன்று கூகிள் பக்கத்தில் கவனித்திருந்தீர்கள் என்றால் அங்குள்ள கூகிள் சின்னத்தில் செவ்வாய் கிரகப்படம் இருப்பதைக் கண்டிருக்கலாம்.
அதை கிளிக் செய்துபாருங்கள், நீங்கள் செவ்வாய் கிரகத்தை இணையம் வழியாக அடைவீர் !!!

ஆம் இது நிஜம்…இந்த இணைய முகவரிக்கு சென்று பாருங்கள்: http://www.google.com/mars/

பூமியின் செயற்கைக்கோள் புகைப்படத்தை இணையம் வழியாக அளித்த கூகிள் தற்போது
செவ்வாய் கிரக மேற்பரப்பின் செயற்கைக் கோள் படத்தையும் இணையம் வழியாக
வழங்க ஆரம்பித்துள்ளது.

இது பற்றி மேலும் விபரங்கள் இங்கே உள்ளது: http://googleblog.blogspot.com/2006/03/mars-attracts.html

ஒரு புதிய வலைப்பதிவு தொடக்கம்

Posted by mugunth on 07 Mar 2006 | Tagged as: கணிணி

கணினித் துறையில் தமிழ் மொழிப் பயன்பாட்டை அதிகரிக்க செய்ய உதவும் நோக்கத்துடன் ஆரம்பித்துச் செயல்பட்டுக் கொண்டிருப்பது தமிழா! தன்னார்வ குழு.

தமிழாகுழுவின் திட்டங்கள் பற்றியும், கணினி மற்றும் திறவூற்று மென்பொருள் உலகில் நடக்கும் புதியச் செய்திகளைப்பற்றியும் அவ்வப்போது தெரியப்படுத்த ஒரு புதியவலைப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

பார்க்க: http://blog.thamizha.com

இதில் தமிழா குழு உறுப்பிணர்கள் பலரும் அவ்வப்போது தமிழாத் திட்டம்
குறித்தும், மென்பொருள் உலகில் நடக்கும் செய்திகள் குறித்தும்
எழுதுவார்கள்.

பதிவு முகவரி மீண்டும்: http://blog.thamizha.com

இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.


குறிப்பு:


யார் வேண்டுமானாலும் தமிழா குழுவில் உறுப்பிணராகலாம். தமிழா குழுவில் சேர
நீங்கள்
தமிழா யாகூகுழுவில் (
http://groups.yahoo.com/group/ThamiZhaDeveloper ) உறுப்பிணராகி
அங்குள்ளவர்களுடன் உரையாடி உங்களுக்கு பிடித்த தமிழா திட்டத்தில்
பங்குகொள்ளலாம்.

proxy வலைத்தளங்களை தமிழில் எப்படி அழைக்கலாம்?

Posted by mugunth on 22 Aug 2005 | Tagged as: கணிணி

நீண்ட நாட்களுக்குப் பிறகு என் வலைப்பதிவில் எழுதுகிறேன். தற்போது சென்னைக்கு பணிமாற்றப்பட்டிருக்கிறேன். சென்னையில் வீட்டில் பி.எஸ்.என்.எல் அகலப்பட்டை(BSNL Broadband) இணைய சேவையை பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

என்னுடைய தமிழா.காம் மற்றும் தமிழ்புளாக்ஸ் வலைத்தளகள் பி.எஸ்.என்.எல் அகலப்பட்டை இணையதொடர்பு வழியாக பார்க்கமுடியவில்லை. இதுபற்றி பி.எஸ்.என்.எல் அலுவலகத்திலும் இணையக்குழுக்களிலும் கேட்டு பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்தும் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை. பி எஸ் என் எல் தொழில்நுட்ப வல்லுனர்களாலும் இதனை தீர்க்கமுடியவில்லை.

நான் வேறு வழியில்லாமல் என்னுடைய வலைத்தளங்களை வேறு சேவையகத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளேன்.

தற்போது http://projectbypass.com/ என்ற proxy வலைத்தளத்தின் மூலம் என் வலைப்பதிவில் எழுதுகிறேன். இந்த proxy வலைதளங்கள் இல்லாவிட்டால் இன்னும் சிரமமாக இருந்திருக்கும்… proxyகள் வாழ்க!

proxy வலைத்தளங்களை தமிழில் எப்படி அழைக்கலாம் என்றுதான் தெரியவில்லை. proxy => பதிலாள் என்று மாண்ட்ரேக் தமிழ்லினக்ஸில் முன்பு பார்த்த ஞாபகம் இருக்கிருக்கிறது. அப்படி பார்த்தால் proxy வலைத்தளங்களை , ‘பதிலாளிவலைத்தளங்கள்’ என்று அழைக்கலாமா என்று தெரியவில்லை.

proxy வலைத்தளங்களுக்கு சரியான தமிழ் வார்த்தை என்ன என்று உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே!

தமிழ் பயர்பாக்ஸ் பற்றி ஒரு நற்செய்தி!

Posted by mugunth on 22 Apr 2005 | Tagged as: கணிணி

அன்மையில் மத்திய அமைச்சர் வெளியிட்ட தமிழ் மென்பொருட்கள் அடங்கிய குறுந்தட்டு சம்மந்தமான சர்ச்சையை பத்ரி அவர் புளாக்கில் அன்மையில் வெளிட்டார்.

அதில் அன்மையில் தமிழா குழு சார்பில் நான் வெளியிட்ட பயர்பாக்ஸ் பொதியைத்தான் சிறு மாற்றம் செய்து சிடாக்(பாரதீயா குழு) செய்ததாக வெளியிட்டுள்ளார்கள் என்ற சந்தேகத்தை பத்ரி எழுதி குறிப்பிட்டிருந்தார்.

அது பற்றி பத்ரி தனி மடல் எழுதி என் கருத்தையும் கேட்டிருந்தார். தொடர்ந்து நான் பாரதீய குழுவிற்கு எழுதி கேட்டதற்கு நான் ஏற்கணவே வெளியிட்ட பொதியைத்தான் அவர்கள் சிறு மாற்றங்கள் செய்து வெளியிட்டதாக அவர்களே ஒத்துக்கொண்டார்கள். மேலும் பொதியினுள் பங்களிப்பாளர்கள் பகுதியில் என் பெயரை குறிப்பிட்டுள்ளதாகவும் சொன்னார்கள்.

ஆனால் மக்களுக்குத் தெரியும் வண்ணம் ஏன் தமிழா குழுவின் பங்களிப்பை குறிப்பிடவில்லை என்று கேட்டிருந்தேன். மேலும் அவர்கள் வலைத்தளத்தில் பயர்பாக்ஸ் தமிழ் பொதியை பற்றி இருக்கும் தகவலையாவது (http://www.ildc.in/GIST/htm/browser.htm) மாற்றி தமிழா குழுவின் பங்களிப்புக்கு உரிய அங்கிகாரம் கொடுக்கவேண்டும் என்று எழுதியிருந்தேன்.

பாரதியா குழுவும்் நாங்களும் சேர்ந்து தமிழ் ஓப்பன் ஆபீஸ் திட்டத்தை செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம் மேலும் அவர்கள் எப்போதும் தமிழா குழுவின் நண்பர்களாகவே இருந்துள்ளார்கள். ஆகையால் அவர்களின் நட்பு கெடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு அவர்களுக்கு மடல் எழுதினேன்.

அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் திரு இராமன், தன் தவறை ஒப்புக்கொண்டு, தமிழா குழுவிற்கு பங்களிப்புக்கு உரிய அங்கீகாரத்தை அளிப்பதாக எழுதியுள்ளார்.

வருகிற ஞாயிற்றுக்கிழமை (24 ஏப்ரல்) 5:30 க்கு அவர் IT.COM நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அதிலும் தமிழா குழுவின் பங்களிப்பை தான் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதே போல் விரைவில் சிடாக்கின் வலைத்தளத்திலும் தமிழ் பயர்பாக்ஸ் பொதி பற்றிய குறிப்பில் தமிழா குழுவின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிடப்போவதாக எழுதியுள்ளார்.

தமிழ் திறவூற்று தன்னார்வ முயற்சிகளில் நமக்கு பங்காளிகாக இருக்கும் பாரதீய குழுவின் நட்பு கெடாமல் ஒரு வழியாக பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுவது குறித்து நிம்மதி ஏற்பட்டது.

பயர்பாக்ஸ் தமிழ் நீட்சிக்கு மொசில்லா தளத்தில் அங்கிகாரம்!

Posted by mugunth on 19 Apr 2005 | Tagged as: கணிணி

அன்புடையீர்,
முன்பு நான் சமர்த்திருந்த பயர்பாக்ஸ் தமிழ் பொதியை அங்கிகரித்து இன்று பயர்பாக்ஸ் நீட்சிகள் பக்கத்தில் சேர்த்துள்ளார்கள்.

பார்க்க:

https://addons.update.mozilla.org/extensions/moreinfo.php?application=firefox&id=512

தமிழ்மணத்திற்கு தொடுப்பு கொடுத்தாயிற்று!!!

Posted by mugunth on 17 Apr 2005 | Tagged as: கணிணி

இன்றையத்தேதியில் 474 தமிழ் வலைப்பதிவுகள் இருக்கின்றன. அதாவது 474 சுதந்திரமாகக் கருத்துக்கூறும் தளங்கள் உள்ளன. இந்தப் புதிய ஊடகமானது தமிழ் சமுதாயத்தையும் அதன் சிந்தனைப்போக்கையும் மாற்றக்கூடிய சக்திவாய்ந்தது.

தமிழ் வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் அறிமுகமான ஒரு தளம் இருக்கிறது என்றால் அது தமிழ்மணம்தான். இங்கிருந்துதான் சக தமிழ்வலைப்பதிவாளர்களை அறிமுகம் செய்துகொள்ள முடிகிறது. தமிழ் வலைப்பதிவாளர் சமுகத்தை உண்மையில் இயக்கிக்கொண்டிருப்பது இந்த தமிழ்மணம் தளம்தான்.

தமிழ்மணம் குழுவிற்கும் அதை வழிநடத்திக்கொண்டிருக்கும் காசிக்கும் என் வாழ்த்துக்களும் வணக்கங்களும் எப்போதும் உண்டு.

தமிழ்மணம்.காம் அனைத்துத் தமிழ் வலைப்பதிவுகளுக்கும் தொடுப்பு கொடுப்பதுபோல், தமிழ்மணத்திற்கும் அவரவர் வலைப்பதிவிலிருந்து தொடுப்புக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அப்படி கொடுக்காதவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். முக்கியக்காரணம், எப்படி அதைச் செய்வது என்று தெரியாததது என்று கூறலாம். ஆனால் உண்மையாள காரணம் எப்படி செய்வது என்று முயன்றுக் கற்றுக்கொள்ள எனக்கு இருந்த சோம்பேறித்தனம் தான்…..

இன்று ஒரு வழியாகத் தமிழ்மணம் தளத்திற்கு என் நியூக்கியஸ் தளத்தைக் குடைந்து பார்த்து 2 கோப்புகளை மாற்றி, தமிழ்மணம் தொடுப்பைக் கொடுத்துவிட்டேன்.

நியுக்கிளியஸ் வலைப்பதிவை பாவிப்போர்க்கு: நியூக்கியஸ் கோப்புக்களில் skins\base\valid.inc மற்றும் skins\base\rss.inc கோப்புகளை மாற்றி வலையேற்றினேன். மாற்றப்பட்ட கோப்புக்களை இங்கிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Next Page »