தமிழ்ப்பதிவுகள்
Archived Posts from this Category
Archived Posts from this Category
Posted by mugunth on 21 May 2007 | Tagged as: தமிழ்ப்பதிவுகள்
கடந்த ஞாயிறு (20-மே-2004) அன்று கோவையில் நடைபெற்ற தமிழ்வலைப்பதிவர் சந்திப்புக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
2 வாரங்களுக்கு முன்பே ரயிலில் முன்பதிவு செய்ததால் சிரமம் இல்லாமல் பெங்களூரிலிருந்து சென்று வரமுடிந்தது.
சக வலைப்பதிவர்கள் சிலர் விரிவாக கோவை சந்திப்பு பற்றி எழுதிவிட்டார்கள்.
பார்க்க: http://masivakumar.blogspot.com/2007/05/blog-post_21.html
http://vinaiooki.blogspot.com/2007/05/blog-post_20.html
http://tvpravi.blogspot.com/2007/05/blog-post_9922.html
http://classroom2007.blogspot.com/2007/05/blog-post.html
இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கிட்டதட்ட அங்கு வந்திருந்த அனைவரையுமே (மா.சிவக்குமாரைத் தவிர) தற்போதுதான் முதன்முதலில் நேரில் சந்திக்கிறேன். சிவக்குமாரை கிட்டதட்ட 5 வருடத்திற்கு முன்பு மலேசியாவில் பார்த்தேன். அப்போது இருந்த மாதிரியே தற்போதும் இருக்கிறார் ![]()
வினையூக்கி, சென்சி, பாலபாரதி, மோகன்தாஸ், உண்மைத்தமிழன், வித்யா, செந்தழல் ரவி போன்ற வலைப்பதிவர்களை சந்தித்த மாத்திரத்தில் அவர்களின் சுறுசுறுப்பு என்னையும் தொற்றிக்கொண்டது. நீண்ட நாள் நண்பர்கள் போல் அவர்களுடன் ஒட்டிக்கொள்ள முடிந்தது. ஓசை செல்லாவை சந்திக்க முடியவில்லை என்பது சற்று ஏமாற்றம். பாமரன் அய்யாவின் சமூக அக்கரையுடன் கூடிய கட்டுரைகளை முன்பே படித்திருக்கிறேன். பாமரனை சந்தித்தது எதிர்பாராத மகிழ்ச்சி.
ரமணி அய்யா அவர்களின் பின் நவிணத்துவம் பற்றிய கட்டுரை எனக்கு அவ்வளவாக
ஏற்புடையதாக இல்லை என்றாலும், சிறப்பாக இருந்தது, இலக்கியத்தில்
ஈடுபாடுள்ள நண்பர்களுக்கு அது பயனுள்ளதாக இருந்திருக்கும்.
வலைப்பதிவர் சுப்பைய்யா அவர்கள் தனக்கு எப்படி வாத்தியார் என்ற பட்டம்
வலையுலகில் கிடைத்தது என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
வலைப்பதிவர்கள் தியாகு, கோவை ரவி, தாமோதரன் சந்துரு, செகுவேரா, ஜெயகுமார்,
ராஜாவனஜ் போன்றோரை சந்திக்க முடிந்தது. இயற்கை விவசாயத்தில் ஆர்வலர் திரு
வின்செண்ட் என்ற உள்ளூர்காரரையும் சந்தித்து பேசமுடிந்தது சிறப்பான
அனுபவம்.
சிரில் அலெக்ஸ் அவர்களுடன் ஸ்கைப் வழியாக வீடியோ அரட்டை அடித்ததும் சிறந்த அனுபவம். அவர்கள் நடத்தும் ‘சற்றுமுன்’ சேவை குறித்து விரிவாக தெரிந்துகொள்ள முடிந்தது.
அடுத்த வலைப்பதிவர் சந்திப்பு/பட்டறையில், தொழில்நுட்பம் சார்ந்த விசயங்களைப் பற்றி மேலும் சில அமர்வுகளை ஏற்பாடு செய்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் விருப்பம்.
அங்கு நான் படைத்த தொழில்நுட்ப அமர்வின், காட்சிக் கோப்புகளை பி.டி.எப் வடிவத்தில் இங்கு வலை ஏற்றியுள்ளேன். தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தகைய ஒரு சந்திப்பை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திய பாலபாரதி உண்மையில் ‘தல’ தான்
. பாலபாரதிக்கு என்னுடைய நன்றிகள்.
Posted by mugunth on 24 Apr 2007 | Tagged as: தமிழ்ப்பதிவுகள்
தமிழ்வலைப்பதிவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. தற்போதைக்கு 1000 க்கும் மேலான (active)தமிழ்ப்பதிவுகள் இருக்கும் என்று கருதுகிறேன். தமிழ்ப்பதிவுகள் தளத்தில் திரட்டப்படுகிற சுமார் 650 பதிவுகள பட்டியல் இங்கே உள்ளது.
அண்மையில் நடைபெற்ற சென்னை தமிழ்வலைப்பதிவர் கூட்டத்தில் சுமார் 50 பேர் கலந்துகொண்டார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.
அதைவிட மகிழ்ச்சி அளிக்ககூடிய செய்தி, அந்த வலைப்பதிவர் கூட்டத்தை மக்கள்
தொலைக்காட்சியில் காட்டியதுதான். வெகுசன ஊடகத்தில் மாற்று ஊடகமாக
பரிணமித்து வரும் வலைப்பதிவுகளைப் பற்றிய செய்தியை அளத்தது மேலும் பலரை
தமிழ்வலைப்பதிவின் பக்கம் கொண்டுவரும் என்று நம்புகிறேன்.
தமிழ் வலைப்பதிவர் ஒரு சக்திமிக்க மற்றும் சமூக பார்வைகொண்ட ஊடகமாக
மாறவேண்டும் என்பது என் விருப்பம். அந்த வகையில் அண்மையில் நடந்த
சந்திப்பு கூட்டமும், அதை ஒட்டிய ஊடக செய்திகளும் மகிழ்ச்சி அளிக்கின்றது.
இந்த சந்திப்பு பற்றிய என் கண்ணில் பட்ட பதிவுகள் பட்டியல்:
http://madippakkam.blogspot.com/2007/04/blog-post_23.html
http://madavillagam.blogspot.com/2007/04/blog-post_24.html
http://abiappa.blogspot.com/2007/04/blog-post_22.html
http://snapjudge.blogspot.com/2007/04/chennai-blogger-meet-tamil-posts.html
http://idlyvadai.blogspot.com/2007/04/fir.html
http://chennapattinam.blogspot.com/2007/04/blog-post.html
http://sugunadiwakar.blogspot.com/2007/04/22042007.html
http://poonspakkangkal.blogspot.com/2007/04/22.html
http://balabharathi.blogspot.com/2007/04/blog-post_24.html
http://koluvithaluvi.blogspot.com/2007/04/blog-post_24.html
http://gilli.in/bloggers-meet-in-chennai-2/
http://imohandoss.blogspot.com/2007/04/blog-post_24.html
http://mugunth.blogspot.com/2007/04/tamil-blogging-community-gets-media.html
(இது என் ஆங்கிலப்பதிவு)
Posted by mugunth on 11 Mar 2007 | Tagged as: தமிழ்ப்பதிவுகள்
தமிழ்ப்பதிவுகள் திரட்டியில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். இதுவரை lilina என்ற கட்டற்ற மென்பொருளை பயன்படுத்திவந்தேன். இந்த மென்பொருளில் தரவுத்தளம் கிடையாது, திரட்டப்படும் பதிவுகள் விபரம் அனைத்தும் கோப்புகளாகவே சேமிக்கப்படும். இந்த முறையினால் வேண்டிய மாற்றங்களை செய்யவது கடினமாக இருந்தது.
தற்போது தரவுத்தள வசதியை கொண்டுள்ள lylina என்ற மென்பொருளை அடிப்படையாகக் கொண்டு புதிய தமிழ்பதிவுகள் திரட்டியை உருவாக்கியுள்ளேன்.
பயனரைப் பொருத்தவரை தமிழ்ப்பதிவுகள் தளத்தில் அவ்வளவாக மாற்றங்கள் தெரியாது.
தற்போதுள்ள ஒரே மாற்றம் rss செய்தியோடை முகவரி மாற்றம் தான்.
புதிய செய்தியோடை முகவரி: http://tamilblogs.com/rss.php
நீங்கள் தமிழ்ப்பதிவுகள் செய்தியோடையை உபயோகிப்போராக இருந்தால் செய்தியோடை முகவரியை மாற்றிக்கொள்ளுங்கள்.
மேலும் மாற்றங்கள் சில தினங்களில் …
Posted by mugunth on 04 Oct 2006 | Tagged as: தமிழ்ப்பதிவுகள்
சிக்கன் குனியா நோயினால் ஒருவராவது பாதிக்கப்படாத குடும்பம் தமிழகத்தில் இருக்கிறதா என்ற அளவுக்கு நிலமை இப்போது இருக்கிறது..
(சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்).
தமிழக அரசு என்ன இதுவரை செய்துள்ளது என்றால் … மிகப்பெரிய கேள்விக்குறிதான் மஞ்சுகிறது.
ஆனால் பக்கத்து மாநிலமான கேரளத்தைப் பாருங்கள்.
கேரள அரசு சிக்கன் குனியாவை சமாளிக்க WHO மற்றும் National Institutes of Communicable Diseases சாரந்த நிபுனர்களை வரவழைத்துள்ள செய்தியைப் பார்த்தேன்.
http://in.rediff.com/news/2006/oct/04gi.htm
பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள ஒரு பிரச்சனையை தீர்க்க, கேரள அரசுக்கு இருக்கும் வேகம் தமிழக அரசுக்கு இல்லை என்பது தான் வேதனை.