இன்று குசும்பன் என்பவரின் வலைப்பதிவைக் காண நேர்ந்தது. அதில் ‘அடல்ட் குசும்பு (வயதுக்கு வந்தவர்க்கும், வருபவர்க்கும்)’ என்ற தலைப்பிலுள்ளப் பதிவில் நாமக்கலில் தான் எய்ட்ஸ் அதிகம் இருப்பது போல் எழுதியிருந்தார். இந்தக் கருத்தை உண்மை என்று பலபேர் நம்பலாம். ஆனால் நான் இதை நம்பமாட்டேன்.�

நான் நாமக்கல் மாவட்டத்துக்காரன் தான், நிறைய எய்ட்ஸ் ஆட்களைப்பார்த்தவன்தான்.� இருப்பினும் நாமக்கலில் எயிட்ஸ் அதிகம் என்பதை ஒப்புக்கொள்ளமாட்டேன்.

உள்ளதைச் சொல்லவேண்டுமானால், நாமக்கல் ஆட்கள்தான் இந்த நோய் பற்றி அதிக விழிப்புடனும் , அறிவுடனும் , பாதுகாப்புடனும் இருக்கிறார்கள்.

மேலும் நாமக்கலில் உள்ள கிட்டதட்ட அனைத்து முக்கிய மருத்துவமணைகளிலும் எய்ட்ஸ் பரிசோதனை வசதி இருப்பதாக அங்குள்ள என் நண்பர்கள் சொல்கிறார்கள்.

களைப் வெட்டும் இடத்திலும் கூட எய்ட்ஸ் நோயைப்பற்றி விவாதிக்கும் கிராமத்து பெண்களை நாமக்கல் வட்டாரத்தில் மட்டும் தான் பார்க்கமுடியும்… (இதை நானே நேரில் பார்த்துள்ளேன்.)

என்னைப்பொருத்தவரை, நாமக்கல்லைத் விடுங்கப்பா , அங்க இருக்கிற பெரும்பான்மையான மக்களுக்கு எய்ட்ஸில் இருந்து காத்துக்கொள்ள இப்ப(வாது) தெரியும்.�

எய்ட்ஸ் நோய்ப் பற்றி அவ்வளவாகத் தெரியாத மற்ற ஊர்களில் எய்ட்ஸ் என்ற உயிர் கொல்லி நோய அதிவேகமாகப் பரவிக்கொண்டிருக்கும வாய்ப்பு உள்ளது். அங்குதான் உடணடியாக எய்ட்ஸ் அபாய மணித் தேவைப்படுகிறது…