நான் தொலைக்காட்சி தொடர்களை பெரும்பாலும் பார்ப்பது இல்லை. எப்பவாவது பொழுது போகவில்லை என்றால் தொலைக்காட்சி தொடர்களை பார்வை இடுவது உண்டு.

அண்மையில் அப்படி தொலைக்காட்சி சானல்களை மேய்ந்து கொண்டிருக்கு ம் போது அருவருக்கத்தக்க வகையில் ஒரு காட்சியை கண்டேன்.

அது எந்தத் தொடர் என்று தெரியவில்லை, நாலு ரவுடிகள் டெல்லிகணேசை போட்டு அடித்துவிட்டு, அவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ய முயற்சிப்பார்கள். பிறகு எப்படியோ மற்றவர் தலையீட்டால், டெல்லிகணைஷ் தப்பி ரத்தம் சொட்டும் தலையுடன் அருகிலுள்ள கோயிலுக்குள் சென்றுவிடுவார். அதன்பிறகும் அதே ரத்தகறையுடன் அவரை காட்டிக்கொண்டிருப்பார்கள். பார்க்க கீழேயுள்ள படங்களை…

இது போன்ற காட்சிகளைதான் தமிழகத்திலுள்ள பெரும்பாலான வீட்டில், சிறுபிள்ளைகள், வீட்டிலிருக்கும் பெண்கள் உட்பட மொத்த குடும்பமும் தினமும் இரவு நேரத்தில் பார்த்துவிட்டு தூங்கப் போகிறார்கள். இப்படிப்பட்ட சூழல் தொடர்ந்தால் தமிழ் சமூதாயம் எப்படிபட்டதாக மாறும் ?

தமிழ் சமுதாயம் அமைதியாகவும் அறிவுடனும் இருக்கவேண்டுமேன்றால் இந்த மாதிரியான தொலைக்காட்சித்தொடர்கள் தடை செய்யப்படவேண்டும்.