தினகரன் பத்திரிக்கையின் ‘போட்டோ திருட்டு’ அம்பலம்.
Posted by mugunth on 21 Jun 2007 at 01:22 pm | Tagged as: பொது
இன்று மதியம் என் அலுவலக நண்பர் சுபாஷ், தன்னுடைய போட்டோ தினகரனில் வந்துள்ளது என்றார். வாழ்த்துக்கள், உங்க போட்டோ பத்திரிக்கைல வர அளவுக்கு என்ன செஞ்சீங்க என்றேன். என்னோட போட்டோ இல்லைங்க, நான் எடுத்த படத்தை என்ன கேட்காமலே தினகரன்ல சுட்டு போட்டிருக்காங்கன்னார்.
இந்த நண்பர் தான் எடுத்த பெங்கலூர் பி.எம்.டி.சி பேருந்து போட்டோவை(அந்த போட்டோவில் அவர் நண்பரும் இருக்கிறார்) ஃபிளிக்கரில் ஏற்றி வைத்திருந்தார். பார்க்க: http://flickr.com/photos/subwiz/294655262/

இதை தினகரன் பத்திரிக்கை ஆட்கள் எடுத்து அவர்கள் பத்திரிக்கையில் ஒரு செய்திக்காக போட்டிருக்கிறார்கள். பார்க்க: http://www.flickr.com/photos/subwiz/580464665/

இதைப்பற்றிய சுபாஷின்ஆங்கிலப் பதிவு: http://jroller.com/page/jcraze?entry=my_photograph_stolen
தினகரன் செய்திருப்பது அப்பட்டமான அறிவுத்திருட்டு.
![]()
திருட்டு செய்திகளை படிக்க தினகரன், நம்பர்வன் நாளிதல் தினகரன்.
அப்ப அழகிரிகிட்ட சொல்லிர வேண்டியதுதான்.
இதையெல்லாம் யாரு பாக்கப்போறாங்கன்னு நினைச்சிருப்பாங்க
இது உங்க பிரண்டு கண்ணுலேயே படணுமா? தினகரனுக்கு டைம்
இப்ப சரியில்ல
அடபாவமே.. !!
தப்புத்தான்,. இருந்தாலும் ஒரு விஷயம் யோசிக்கனுங்க..
பல நேரத்தில வலைப்பதிவர்கள் நமது பதிவில் புகைப்படம் இருந்தால் நல்லாயிருக்கும்னு நெட் ல வலை வீசி தேடி வேறு வலைத்தளத்தில்/ சில பத்திரிக்கையின் ஆன்லைன் பதிப்பில் வந்திருக்கும் படத்தை காப்பி எடுத்து நம்ம வலைப்பூவில் சேர்கிறோம்.. பொதுவாக Disclaimer / Source / Thanks போட்டுவிடுவோம் .. அந்த தினகரன் நிருபர் அதை செய்திருக்கலாம்..
வெறும் பேருந்தின் படமாக மட்டும் இருந்தால் பரவாயில்லை.. அதில் ஒரு நபரும் இருக்கின்ற காரணத்தால், தினகரன், இதை போடுவதற்கு முன்பு 2 முறை யோசித்திருக்க வேண்டும்..
சிலர் தங்கள் புகைப்படம் / தங்கள் எடுத்த புகைப்படம் ஒரு நாளிதழில் வந்தால் மகிழ்ந்து அனைவருக்கும் காண்பிப்பார்கள் .. ஒரு சிலருக்கு அது பிடிக்காது..
வீ எம்
முகுந்த்,
தமிழ் ஓப்பன்ஆபிஸ் பதிவிறக்கங்கள் சுட்டிகள் எதுவும் நீண்ட நாட்களாக வேலை செய்யவில்லை…. நானும் எனது நண்பர்களும் சேர்ந்து தமிழகத்தில் சில கிராமங்களில் கணிணியும் அதில் தமிழ் லினக்ஸ், ஓப்பன்ஆபிஸ் மற்றும் சில தமிழ் மென்பொருட்களும் வழங்கி தமிழ் வழி கணிணி பயிற்சியை ஊக்குவித்து வருகிறோம்… அதற்கு அவசரமாக எனக்கு தமிழ் ஓப்பன் ஆபிஸ் லினக்ஸ் பதிப்பு தேவைப்படுகிறது …
# http://trinetra.ncb.ernet.in/bharateeyaoo/download/index.html [இந்தியாவிலுள்ள சேவையகம் - விண்டோஸ்/லினக்ஸ் பொதிகளுக்கு]
# ftp://lightsource.physics.utoronto.ca/pub/venkat/openoffice/win32/ [கணடாவிலுள்ள சேவையகம் - விண்டோஸ் பொதி மட்டும்]