இன்று பத்ரியின் வலைப்பதிவைப்பார்க்க நேரிட்டது. அதில் அவர் தினமலர் பத்திரிக்கையின் அயோக்கியத்தனத்தினை படம் பிடித்து காட்டியுள்ளார். இதுபோல் சமூக விரோத செயல்களை யார் செய்தாலும் தமிழ் வலைப்பதிவாளர்கள் அம்பலப்படுத்தவேண்டும்.

தமிழ் வலைப்பதிவுகள் இன்னொரு சக்திவாய்ந்த ஊடகமாக மாறிவருவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் வலைப்பதிவுகள் சமூக பிரச்சனைகளை கையிலெடுத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ் வலைப்பதிவாளர்கள் திரு பத்ரி எழுதியதைப்போல் சமூகப்பிரச்சனைகளை பற்றி நிறைய எழுதவேண்டும். அதன் மூலம் மக்களிடையே விழிப்பை ஏற்படுத்த முடியும். அது சிறப்பான மக்களாட்சிக்கு வழிவகுக்கும்.