புதிய பதிவு,புதிய சேவையில் (சோதனையில்…)
Posted by mugunth on 09 Jun 2007 at 11:49 am | Tagged as: Uncategorized
தமிழ்ப்பதிவுகள் தளத்தில் இலவச வலைப்பதிவுகளை கொடுக்க முயற்சி எடுத்துவருகிறேன். அதாவது புளாக்ஸ்பாட் போல் ஒரு இலவச சேவை தமிழ் பதிவர்களுக்கு. இதற்கு வேர்ட்பிரஸ் மென்பொருளை நிறுவி சோதித்துவருகிறேன். ராஜா மற்றும் சிலர் இந்த புதிய சேவையை பயனப்படுத்த துவங்கி இருக்கிறார்கள்.
நானும் இந்த புதிய சேவைக்கு என்னுடையப்பதிவை மாற்றியுள்ளேன். இன்னும் என்னுடைய பழைய இடுகைகளை இங்கு இடம் மாற்றம் செய்யவில்லை. தற்போதைக்கு என் பழைய பதிவுகளை http://mugunth1.tamilblogs.com என்ற முகவரியில் படிக்கலாம். அவற்றை கூடிய விரைவில் இங்கு மாற்ற உள்ளேன்.
உங்களில் யாருக்காவது தமிழ்பதிவுகளில் ஒரு பதிவை தொடங்கவேண்டும் என்ற ஆவல் இருந்தால் - http://tamilblogs.com/wp-signup.php என்ற சுட்டியைத் தட்டிப்பார்க்கவும். இந்த சேவை இன்னும் சோதணையிலுள்ளது என்பதை கவனித்தில் எடுத்துக்கொள்ளவும் (ஆகையால் அவ்வப்போது சேவையில் தடங்கல் ஏற்படலாம்).
2 Responses to “புதிய பதிவு,புதிய சேவையில் (சோதனையில்…)”
Leave a Reply
You must be logged in to post a comment.
புதிய பதிவைப் பெறுவதற்கான இணைப்பை tamilblogs.com முகப்புப் பக்கத்தில் பெரிதாக, தெளிவாக தெரியப்படுத்தினால் வரவேற்பு கூடும்.
நிறைய புதிய, நல்ல வார்ப்புருக்களைத் தந்திருக்கிறீர்கள். நன்று.
adadaa.comல் இருப்பது போல் tamilblogs.comல் இணைந்துள்ள பதிவுகளுக்கு என்று ஒரு முகப்புப் பக்கம் தரலாம் தானே?
i had created one sir.