தமிழ்விசை 0.3 வெளியிடப்பட்டது!
Posted by mugunth on 14 Dec 2006 at 08:29 pm | Tagged as: பொது
தமிழ்விசை என்ற செயலி மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ், தண்டர்பேர்ட் மற்றும் சாட்ஜில்லா அரட்டை செயலிகளில் தமிழ் எழுத உதவும் ஒரு நீட்சி. இது தமிழா அமைப்பின் கூட்டுமுயற்சியில் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வரும் பல்வேறு செயலிகளில் ஒன்று.
எ-கலப்பை போன்ற மென்பொருட்களை தங்கள் கணினியில் நிறுவ தேவையான admin உரிமைகள் இல்லாதவர்களும் இந்த நீட்சியை நிறுவி தமிழெழுத முடியும். மேலும் இது விண்டோஸ், லினக்ஸ், மேக் என்று மொசில்லா இயங்கும் அனைத்து இயங்குதளங்களிலும் பயன்படுத்த முடியும்.
தமிழ்விசையின் பதிப்பு 0.3, 12 டிசம்பர் 2006 அன்று வெளியிடப்பட்டது.
வெளியீடுபற்றிய அறிவிப்பை தமிழ்விசை திட்டத்தின் உறுப்பிணர் கோபி தமிழ்கணிமை மடற்குழுவில் அறிவித்தார்.
இந்தப்பதிப்பில் கீழேயுள்ள புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன:
1. பாமினி மற்றும் தமிழ்தட்டச்சு வகை விசைப்பலகை முறையில் பயன்படுத்த வசதி. பாமினி விசைப்பலகை இலங்கைத் தமிழர் மத்தியிலும் தமிழ்தட்டச்சு விசைப்பலகை தமிழகத் தமிழர் மத்தியிலும் பிரபலம்.
2. குறுக்கு விசைகளை பயனரே தெரிவு செய்து கொள்ள இயலும்.
3. 0.2 பதிப்பின் வழுக்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டுவிட்டன.
இப்பதிவுக்கான அனைத்து நிரல்களும் கோபி அவர்களாலே செய்யப்பட்டது. தமிழ்க்கணிமை மடற்குழுவிலுள்ள ரவி, தி.வா, சேது ஆகியோர் இப்பதிப்வை சோதனை செய்து வழுக்களை நீக்கப் பேருதவி செய்தனர்.
தமிழ்விசையின் இப்பதிப்பு கீழேயுள்ள சுட்டிகளிலிருந்து பதிவிறக்கிப் பயன்படுத்தவும்:
http://tamilkey.mozdev.org/installation.html
https://addons.mozilla.org/firefox/2994/
தமிழ௠மொழியில௠ஃபயரà¯à®ƒà®ªà®¾à®•à¯à®¸ 2.0 எபà¯à®ªà¯Šà®´à¯à®¤à¯ எதிரà¯à®ªà®¾à®°à¯à®•லாமà¯
Hi 2 all! good work!
Find 1000\’s of the Hottest Ringtones - Choose from Many Providers