http://tamilblogs.com தளத்தில் ஒரு புதிய தமிழ்பதிவுகள் திரட்டி நிறுவியுள்ளேன். இது lilina.sourceforge.net தளத்திலுள்ள திறவூற்று மென்பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் என்ன சிறப்பம்சம் என்று கேட்டால் இவ்வாறு பட்டியலிடலாம்:1. மிக எளிமையாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்மணம், தேன்கூடு போன்ற தளங்களில் உள்ளது போல் பல மேம்பட்ட வசதிகள்
இல்லாமல், அடிப்படை தேவையான இடுகைகளை திரட்டும் வேலையை மட்டும் இது சிறப்பாக
செய்யும்.

2. 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பதிய இடுகைகள் திரட்டப்படும்.

3. படிக்க எளிதான முறையில் தலைப்பு + பதிவின் பெயர் மட்டும் ஒரு வரியில் காணப்படும் - அவற்றை சொடுக்கினால் விரிவாக படிக்க இயலும்.

4. திரட்டப்படும் பதிவுகளுக்கு RSS ஓடை வசதி இச்சுட்டியிலுள்ளது:
http://tamilblogs.com/feed.xml - உங்களுக்குப் பிடித்த ஒரு feedreader
இல் இந்த RSS செய்தியோடையை இனைத்துக்கொண்டால், அவ்வப்போது தமிழ்
வலைப்பதிவர் உலகில் என்ன நடக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

5. எளிதாக உங்கள் பதிவுகளை இணைத்துக்கொள்ளலாம் பார்க்க:http://tamilblogs.com/submit_blog.php -

கருத்துக்கள் அடிப்படையில் மட்டுருத்துவது எல்லாம் இருக்காது. ஆபாசமான
கருத்துக்கள் இல்லாத பட்சத்தில் அனைத்து பதிவுகளும் இணைத்துக்கொள்ளப்படும்.

இன்னும் பல வசதிகளை - தற்போதுள்ள எளிமையான தோற்றம் மாறாமல் - கொடுக்க
உள்ளேன். அதற்கு உங்கள் கருத்துக்களை/பின்னூட்டங்களை எதிர்நோக்கியுள்ளேன்.


http://tamilblogs.com
தளத்தைப் பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை எழுதவும்.