[சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து திரு குமார் குமரப்பன் அனுப்பிய செய்திக்குறிப்பு உங்கள் பார்வைக்கும்….]

‘தமிழா! தொண்டர் குழுவின் அயராத உழைப்பினாலும் மலேசியத் தமிழ் நண்பர்களின் விடாத முயற்சியினாலும் வெளியான “தமிழா! 1.0″ மென்பொருட்கள் நிறைந்த குறுந்தட்டு சான் பிரான்ஸிஸ்கோவில் வெளியிடப் பட்டது.

இந் நிகழ்சி கலிபோர்னியா தமிழ்க் கழகத்தின் மே 22ம் தேதி ஆண்டு விழாவில் நடந்தேறியது. இக் குறுந்தட்டை சான் பிரான்ஸிஸ்கோ Consul General உயர் திரு H. H. S.விஸ்வனாதன் அவர்கள் வெளியிட கலிபோர்னியா தமிழ்க் கழகத்தின் தலைவி திருமதி. வெற்றிச்செல்வி இராஜமாணிக்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இதற்கான நிழற் படத்தை இவ்வலைத் தளத்தில் காண்க.


இக் குறுந்தட்டு வெளியீட்டின் பின்
, சிலருக்கு இக் குறுந் தட்டு இலவசமாகக் கொடுக்கப் பட்டாலும், அநேக தமிழ்க் கணினி ஆர்வலர்களும் அவர் தம் குழந்தைகளும் இக்குறுந்தட்டை விலை கொடுத்து வாங்கிக்கொண்டார்கள். இத் தமிழ் மென்பொருட்களின் முன்னேற்றத்தைக் கண்டு சிலருக்கு ஆச்சரியமே. பலருக்கு இது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது என்பது அங்கிருந்தவர்களுக்குக் கண்கூடு.

குமார் குமரப்பன், சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதி, கலிபோர்னியா, அமெரிக்கா