தமிழ் பயர்பாக்ஸ் பற்றி ஒரு நற்செய்தி!
Posted by mugunth on 22 Apr 2005 at 02:53 am | Tagged as: கணிணி
அன்மையில் மத்திய அமைச்சர் வெளியிட்ட தமிழ் மென்பொருட்கள் அடங்கிய குறுந்தட்டு சம்மந்தமான சர்ச்சையை பத்ரி அவர் புளாக்கில் அன்மையில் வெளிட்டார்.
அதில் அன்மையில் தமிழா குழு சார்பில் நான் வெளியிட்ட பயர்பாக்ஸ் பொதியைத்தான் சிறு மாற்றம் செய்து சிடாக்(பாரதீயா குழு) செய்ததாக வெளியிட்டுள்ளார்கள் என்ற சந்தேகத்தை பத்ரி எழுதி குறிப்பிட்டிருந்தார்.
அது பற்றி பத்ரி தனி மடல் எழுதி என் கருத்தையும் கேட்டிருந்தார். தொடர்ந்து நான் பாரதீய குழுவிற்கு எழுதி கேட்டதற்கு நான் ஏற்கணவே வெளியிட்ட பொதியைத்தான் அவர்கள் சிறு மாற்றங்கள் செய்து வெளியிட்டதாக அவர்களே ஒத்துக்கொண்டார்கள். மேலும் பொதியினுள் பங்களிப்பாளர்கள் பகுதியில் என் பெயரை குறிப்பிட்டுள்ளதாகவும் சொன்னார்கள்.
ஆனால் மக்களுக்குத் தெரியும் வண்ணம் ஏன் தமிழா குழுவின் பங்களிப்பை குறிப்பிடவில்லை என்று கேட்டிருந்தேன். மேலும் அவர்கள் வலைத்தளத்தில் பயர்பாக்ஸ் தமிழ் பொதியை பற்றி இருக்கும் தகவலையாவது (http://www.ildc.in/GIST/htm/browser.htm) மாற்றி தமிழா குழுவின் பங்களிப்புக்கு உரிய அங்கிகாரம் கொடுக்கவேண்டும் என்று எழுதியிருந்தேன்.
பாரதியா குழுவும்் நாங்களும் சேர்ந்து தமிழ் ஓப்பன் ஆபீஸ் திட்டத்தை செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம் மேலும் அவர்கள் எப்போதும் தமிழா குழுவின் நண்பர்களாகவே இருந்துள்ளார்கள். ஆகையால் அவர்களின் நட்பு கெடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு அவர்களுக்கு மடல் எழுதினேன்.
அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் திரு இராமன், தன் தவறை ஒப்புக்கொண்டு, தமிழா குழுவிற்கு பங்களிப்புக்கு உரிய அங்கீகாரத்தை அளிப்பதாக எழுதியுள்ளார்.
வருகிற ஞாயிற்றுக்கிழமை (24 ஏப்ரல்) 5:30 க்கு அவர் IT.COM நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அதிலும் தமிழா குழுவின் பங்களிப்பை தான் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதே போல் விரைவில் சிடாக்கின் வலைத்தளத்திலும் தமிழ் பயர்பாக்ஸ் பொதி பற்றிய குறிப்பில் தமிழா குழுவின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிடப்போவதாக எழுதியுள்ளார்.
தமிழ் திறவூற்று தன்னார்வ முயற்சிகளில் நமக்கு பங்காளிகாக இருக்கும் பாரதீய குழுவின் நட்பு கெடாமல் ஒரு வழியாக பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுவது குறித்து நிம்மதி ஏற்பட்டது.