கோலாலம்பூரிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ளது போர்ட் டிக்சன் என்னும் ஊர். இது ஒருசுற்றுலாத்தலமும் கூட. [ இதன் வரைப்படத்தினை பார்க்க இங்கே தட்டவும்.]

இங்கு தமிழா! திறவூற்று மென்பொருட்களை அறிமுகம் செய்து உரையாற்றும் வாய்ப்பு இன்று (1ஜூன் 2004) கிடைத்தது.

இங்கு தற்பொழுது இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி பட்டறை நடந்துகொண்டுள்ளது. இங்கு புதிய தொழில்நுட்பங்கள் ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்தவகையில் அதில் எங்களுக்கு தமிழா குறுந்தட்டு மற்றும் அதிலுள்ள தமிழ் திறவூற்றுச் செயலிகள் பற்றி பேச ஒரு மணிநேரம் கொடுத்திருந்தனர்.

இதற்கு ஏற்பாடுகளை எல்லாம் செய்தவர் நண்பர் தினேஷ்தான். இங்கே நண்பர் திணேஷ் பற்றி கொஞ்சம் குறிப்பிட விரும்புகிறேன். இவர் இங்கே மலேசியாவில் கணினி பயிற்சிப்பள்ளி ஒன்றை கோலாலம்பூரில் நடத்திவருகிறார். தமிழாவைப்பற்றித் தெரிந்தவுடன் தமிழாவைப்பரப்பும் தீவிரத் தொண்டராக மாறிவிட்டார் ).

இவர் பயிற்சிப் பள்ளியிலும் தமிழா மென்பொருட்களைப் பற்றிய பயிற்சிகளை அளித்துகொண்டுள்ளார். அவர் விசிட்டங்கார்டிலேயே தமிழா மென்பொருட்கள் மற்றும் பயிற்சிகள் வழங்குவதைக் குறிப்பிட்டுள்ளாருங்க!

இன்று மாலை எங்கள் அலுவலகத்திற்கு வந்த திணேஷுடன் போர்ட் டிக்ஸன் (Port Dickson )கிளம்பினோம்.
கிட்டதட்ட 8:00 மணிக்கு எங்கள் அறிமுகத்தைத் தொடங்கினோம். நான் 10 நிமிடம், திறவூற்று செயலிகள் பற்றியும், தமிழா குழுப்பற்றியும், தமிழா குறந்தட்டிலுள்ள செயலிகள் பற்றியும் அறிமுக உரையாற்றினேன்.

அதன் பிறகு powerpoint கோப்பு உதவியுடன் தமிழா குறந்தட்டிலுள்ள மென்பொருட்களை பற்றிய விளக்கத்தையும் திணேஷ் கொடுத்தார். [ அந்த கோப்பை நீங்கள் இங்கு தட்டி இறக்கிக்கொள்ளலாம் ]
பிறகு தமிழா குறுந்தட்டிலுள்ள மென்பொருட்களைக் கொண்டு என்ன என்ன செய்யமுடியும் என்பதை செயல்விளக்கமாக காட்டினோம்.
வழக்கம்போல் டக்ஸ் பெயின்ட் தான் வந்தவர்களை மிகவும் கவர்ந்த மென்பொருளாக இருந்தது!
பிறகு இருவரும்கேள்வி பதில்களை சந்தித்தோம்.

இங்கு மலேசியாவில் திறவூற்று மென்பொருட்கள் மொழிபெயர்ப்பு முகாம் ஒன்றை நடத்தும் எண்ணத்தை வெளியிட்டேன். வந்திருந்தவர்களில் பலர் அதில் கலந்து கொண்டு உதவ முன்வந்தார்கள்.

அதே போல் தமிழ் கணினி பயிற்சியை அவரவர் பகுதியில் நடத்தவும் விண்ணப்பங்கள் வந்தன. அனேகமாக அடுத்த மாதம் அனைத்து வாரஇறுதி நாட்களிலும் தமிழ்த்திறவூற்று பயிற்சிகொடுப்பதில் செலவிடுவோம் என்று நினைக்கறேன். கரும்புத்திண்ண கூலியும் கிடைக்கிறது விடுவோமா!

பிறகு தமிழா குறுந்தட்டுக்களை தேவைப்பட்டோருக்கு [ஒரு குறுந்தட்டு 15 ரிங்கட் விலையில்] வழங்கிவிட்டு,

கோலாலம்பூரை நோக்கி வண்டியை கிளப்பினோம்.