தமிழ்மணத்திற்கு தொடுப்பு கொடுத்தாயிற்று!!!
Posted by mugunth on 17 Apr 2005 at 05:25 am | Tagged as: கணிணி
இன்றையத்தேதியில் 474 தமிழ் வலைப்பதிவுகள் இருக்கின்றன. அதாவது 474 சுதந்திரமாகக் கருத்துக்கூறும் தளங்கள் உள்ளன. இந்தப் புதிய ஊடகமானது தமிழ் சமுதாயத்தையும் அதன் சிந்தனைப்போக்கையும் மாற்றக்கூடிய சக்திவாய்ந்தது.
தமிழ் வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் அறிமுகமான ஒரு தளம் இருக்கிறது என்றால் அது தமிழ்மணம்தான். இங்கிருந்துதான் சக தமிழ்வலைப்பதிவாளர்களை அறிமுகம் செய்துகொள்ள முடிகிறது. தமிழ் வலைப்பதிவாளர் சமுகத்தை உண்மையில் இயக்கிக்கொண்டிருப்பது இந்த தமிழ்மணம் தளம்தான்.
தமிழ்மணம் குழுவிற்கும் அதை வழிநடத்திக்கொண்டிருக்கும் காசிக்கும் என் வாழ்த்துக்களும் வணக்கங்களும் எப்போதும் உண்டு.
தமிழ்மணம்.காம் அனைத்துத் தமிழ் வலைப்பதிவுகளுக்கும் தொடுப்பு கொடுப்பதுபோல், தமிழ்மணத்திற்கும் அவரவர் வலைப்பதிவிலிருந்து தொடுப்புக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அப்படி கொடுக்காதவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். முக்கியக்காரணம், எப்படி அதைச் செய்வது என்று தெரியாததது என்று கூறலாம். ஆனால் உண்மையாள காரணம் எப்படி செய்வது என்று முயன்றுக் கற்றுக்கொள்ள எனக்கு இருந்த சோம்பேறித்தனம் தான்…..
இன்று ஒரு வழியாகத் தமிழ்மணம் தளத்திற்கு என் நியூக்கியஸ் தளத்தைக் குடைந்து பார்த்து 2 கோப்புகளை மாற்றி, தமிழ்மணம் தொடுப்பைக் கொடுத்துவிட்டேன்.
நியுக்கிளியஸ் வலைப்பதிவை பாவிப்போர்க்கு: நியூக்கியஸ் கோப்புக்களில் skins\base\valid.inc மற்றும் skins\base\rss.inc கோப்புகளை மாற்றி வலையேற்றினேன். மாற்றப்பட்ட கோப்புக்களை இங்கிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.