நேற்று தமிழ்வழிக் கல்வியின் நடைமுறை பயன் பற்றிய ஒரு கருத்து என் சீன ஆசிரியையிடமிருந்து வந்தது! எப்படி என்று கேட்கிறீர்களா. ) மேலும் படிங்க ….

அன்மைகாலமாக நான் சீன மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளேன். வாரத்தில் இரண்டு நாள் வகுப்புகள். வகுப்பு ஆரம்பிக்கும் போது என்னுடன் சேர்ந்து ஐந்து பேர் இருந்தார்கள். எல்லோரும் மலேசிய ரைஸ்குழுவைச் சார்தவர்கள். சீனம் பேசாதவர்களுக்காக ஒரு சீன வகுப்பு வேண்டும் என்று நாங்கள் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தோம். பிறகு அதன் விளைவாக இன்னொரு ரைஸ் உறுப்பினரால் ஒரு வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. இது 3 மாத்ததிற்கு முன். இப்போது ஒவ்வொருவராக விலகி தற்போது நான் மற்றும் நியூசிலாந்தைச் சார்ந்த ஒரு வெள்ளைக்கார், இரண்டு பேர்தான் வகுப்பில் இருக்கிறோம். வாரத்தில் இரண்டு நாள் வகுப்பு. அலுவலகத்தில் எவ்வளவு வேலை இருந்தாலும் வகுப்புக்கு முடிந்த அளவுக்கு மட்டம் போடாமல் சென்றுகொண்டிருக்கிறேன். ஆனால் சீனம் தான் என் தலையில் ஏற ரொம்பக் கஸ்டப்படுகிறது ;)

நேற்றைய வகுப்பில் சீனத்து கணக்கு குறியீடுகளை ( கூட்டல், கழித்தல் போன்றவை) பற்றி வகுப்பு எடுத்தார் எங்கள் ஆசிரியை. அப்போது பெருக்கல் வாய்ப்பாடு பற்றி குறிப்பிடும்போது, வேகமாக சொல்லக்கூடிய முறையில் உள்ளது சீனத்தில் தான் என்றார்.
அதாவது 1 X 2 = 2 என்பதை, ஆங்கிலேயர் சொல்வதனால், one twos are two (மொத்தம் நான்கு வார்த்தைகள்) என்று சொல்ல மனதில் சொல்ல வேண்டி இருக்கும். அல்லது வேறு மாதிரி சொன்னால் கூட formula வில் உள்ள எண்களைக்காட்டிலும் ஒரு வார்த்தையையாவது அதிகமாக சேர்க்கவேண்டும். அதனால் ஒரு எண்ணைப்பெருக்க ஆங்கிலேயர் அதிக நேரம் எடுக்கவேண்டி வருமே என்றார்.
ஆனால் சீனத்தில் என்களை மட்டும்தான் குறிப்பிடுவோம் என்றார்.
அதாவது…yi er er [ yi => ஒன்று, er => இரண்டு] மூன்றே வார்த்தைகளைத்தான் மனதில் சொல்லிப்பார்ப்போம்.

அதனால் எங்களால்(சீனக் கல்வி கற்றவர்களால்) ஆங்கிலம் மற்றும் மலாய் மொழியில் பாடம் கற்றவர்களை விட வேகமாக மனதில் கணக்குப் போடமுடியும் என்று பெருமையடித்தார்.

நான் தமிழிலும் அப்படிதாங்க என்றேன். {ஒரெண்டு ரெண்டு, ஈரெண்டு நான்கு என்று மனப்பாடமாக…சிறு வயதில் 16ஆம் வாய்ப்பாடு வரை மணப்பாடம் செய்ய நான் பட்ட கஸ்டம் இன்னும் நினைவிலிருக்கிறது. இப்போதும் மனதில் கணக்கு போட வாய்ப்பாடு உதவுகிறது என்று தான் சொல்வேன் } . அவருக்கு ஆச்சரியம். மலேசிய மக்கட்தொகையில் 8% தமிழர்களாக இருந்தும் தமிழ் மொழியைப்பற்றி மற்ற இனத்திற்கு அவ்வளவாகத் தெரியாமல் (நம்மவர்கள் தெரியவைக்காமல்) இருப்பது சற்று வருத்தம்தான்.

அவரோட கருத்துப்படி பார்த்தால் , குறைந்தபட்சம் ஆரம்ப வகுப்பு வரை் தமிழ் வழிக்கல்வி கற்ற தமிழன் கணக்கில் புலியாகத்தானே இருக்கவேண்டும்?

தமிழ்வழிக் கல்வியினால் உள்ள நன்மைகள் ஏராளமாக இருக்கறதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். அதில் இந்த தமிழ் வாய்ப்பாட்டின் பயனையும் சேர்த்துக்கொள்ளலாம்.