அன்மையில் ஈராக்கில் நேப்பாள் நாட்டு தொழிலாளர்களை தீவிரவாதிகள் கொன்ற சன் தொலைக்காட்சியில் அப்பட்டமாக பார்க்கும் துர்பாக்கியம் எனக்கு கிடைத்தது. மனிதனை ஆடு அறுப்பதுபோல் அறுக்கிறார்கள் அதை அப்படியே ஒரு பொதுசன தொலைக்காட்சியில் காட்டித்தொலைக்கிறார்கள். எனக்கே சகிக்கவில்லை. நல்லவேளை அந்த நேரத்தில் எங்கள் வீட்டில் குழந்தைகள் யாரும் அப்போது இல்லை.

இதுபற்றி இணையத்து நண்பர் நாமக்கல் ராஜாவிடன் மறுநாள் குறிப்பிட்டதற்கு அவர் சொன்னார். நாங்க தொலைக்காட்சியில இது போல் பல கொலைகளை பார்த்துட்டோங்க என்று சாதாரணமாக பதிலளித்தார்.

இப்படிப்பட்ட கொடுரமான காட்சிகளை ஏன் இப்படி அயோக்கியத்தனமாக இந்தத் தொலைக்காட்சிகள் காட்டுகின்றன? இப்படிப்பட்ட காட்சிகளை தொடர்ந்து காட்டினால் தமிழன் மனதில் வன்முறை வளராமல் வேறு என்ன வளரும். ஊடகங்களின் இத்தகைய பொருப்பற்ற தன்மையை கண்டிக்க வழியில்லையா?