இன்று அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு சும்மா சுற்றுவதென்று காலையிலேயே முடிவு செய்துவிட்டேன். ஒரு மாற்றத்திற்குத் தான்- மேலும் நிறைய லீவு வேற பயன்படுத்தாமல் பாக்கி இருக்கிறது எனக்கு ;).� மேலும் இன்னைக்கு எந்த மீட்டிங்கும் இல்லை மற்ற அலுவலக வேலைகளை நண்பர்கள் கவனித்துக்கொள்ள முடியும் ஆகையால் நான் போகாமல் இருந்தால் ஒன்றும் பாதகமில்லை…

அலுவலக நண்பருக்கு தொலைபேசியில் அழைத்து இன்னைக்கு அலுவலகம் வரமாட்டேன் sick leave சொல்லிடு என்று சொல்லிவிட்டு மீண்டும் படுத்து உறங்கிவிட்டு மணி 11:00க்கு எழுந்தேன். நண்பர் கணேசன்(http://www.ryze.corm/go/PropertyAgent ) மதிய உணவு சாப்பிட ஏற்கணவே கூப்பிட்டு இருந்தார். அவருக்கு தொலைபேசியில் மணி 12.30 க்கு அவர் அலுவலகத்திற்கு வருவதாகத் தெரியப்படுத்திவிட்டு புறப்பட்டு சென்றேன்.

கணேசனின் அலுவலகம் இருக்கும் அதே அலுவலகத்தில் தான் நண்பர் டேவிட் ஆனந்தின் (http://www.ryze.com/go/davidananth ) அலுவலகமும் இருக்கிறது. அவர் தான் அன்மையில் பார்த்த காமராஜ் என்ற படத்தைப்பற்றி ரொம்ப சிறப்பாக சொல்லிக்கொண்டிருந்தார். அவரிடமிருந்து அந்த சிடியை டேவிட்டிடம் இருந்து பெற்றுக்கொண்டு, மதிய உணவை முடித்துக்கொண்டு வீடு திரும்பினேன்.

படத்தை என் கணினியில் பார்த்தவுடன் இதன் தயாரித்தவர்களுக்கு ஒரு கோடி நன்றி சொல்ல வேண்டும் என்றுதான் தோன்றியது. மிகவும் தரமாகப் படத்தை எடுத்து காமராஜரையும் உள்ளது உள்ளபடி அருமையாகக் காட்டியுள்ளார்கள்.

காமராஜரை இயக்கிய எண்ணங்களை அழுத்தமாக காட்டியிருக்கிறார்கள்,� குறிப்பாக அவரை இயக்கிய ‘கல்வியை அனைவருக்கும் அளிக்கவேண்டும்’ மற்றும் ‘வறுமையைப்போக்கவேண்டும்’ என்ற தீவிர சிந்தனையை இந்தப் படம் பார்க்கும் எவரும் உணரமுடியும்.

தமிழகத்தைப்பற்றியும் அதன் வரலாற்றைப்பற்றியும் அதிகம் தெரியாத, அல்லது தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லாத மலேசியத் தமிழராகிய டேவிட் போன்றோரையும் இந்தப் படம் கவர்ந்துள்ளது என்றால், அதுதான் இந்தப்படத்தின் வெற்றி என்று சொல்லலாம். { பெரும்பாலான மலேசிய மற்றும் சிங்கைத்தமிழர்களுக்கு (அதாவது தற்போதைய இளையத் தலைமுறைக்கு) தமிழகத்தின் வரலாறு தெரியாது என்பதை தமிழகத் தமிழர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் }

இப்படத்தில் சிலக்காட்சிகள் மனதில் நிற்கின்றன,
1. சாரயம் விற்றதற்காக போலீஸ் பிடித்துச் சென்ற� தன் கணவரை வெளியேவிட கோரும் பெண்னிடம் கடுமையாக பேசும் காமராஜரும், பிறகு காரில் போகும்போது அந்த பெண்ணின் குரலும், அவள் கையில் இருந்த குழந்தையின் கதறலும் காமராஜரின் நினைவுக்கு வரும்படிக் காட்டப்பட்ட காட்சி அருமையாக காமராஜரின் குணத்தைக் காட்டும்படி இருந்தது.

2. கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதற்காக இந்திராகாந்தி மேல் நடவடிக்கை எடுக்கபோவதாக காமராஜர் அறிவத்ததைப்பற்றி இந்திராகாந்தியிடம் நிருபர்கள் ஒரு காட்சியில் கேட்பார்கள். அதற்கு who is kamaraj? என்பாரே பார்க்கலாம். இது உண்மையில் நடந்ததுதான் என்றாலும் படத்தில் அந்தகாட்சி மிக தத்ருபமாக காட்டப்பட்டிருக்கிறது. தமிழனாகிய காமராஜரை அவர் அலட்சியப்படுத்தியது, தமிழர் அனைவரையும் அலட்சியப்படுத்தியது போல் தான் எனக்கு பட்டது.

இங்கே, இந்திய வரலாற்றில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய வரலாற்றுப்பிழையும் ஒரு தமிழனாக என் மனதைத் தாக்கியது. who is kamaraj? என்று கேட்ட இந்திராவை பிரதமாராக ஆக்கியவரும் அதே காமராஜ்தான். அதற்காக டெல்லியில் இருந்து போராடுவதாகக் காமராஜரைக் காட்டும் போது அவர் image விஸ்வரூபமாக தெரிந்தது. அவரை தமிழரின் பிரதிநிதி என்று பார்த்தால் தமிழனின் image டெல்லியில் அப்போது பிரமாண்டமாகத்தான் (படத்தில் காட்டப்பட்டிருப்பது போல்) இருந்திருக்கம் என்று நிணைக்கிறேன்.
அந்த சமயத்தில் பிரதமர் பதவி காமராஜருக்கு வலிய வந்தது. அதை ஏன் புறந்தள்ளிவிட்டு இந்திராவைத் தேர்ந்தெடுத்தார்? அந்த சமயத்தில் காமராஜர் என்ற தமிழர் பிரதமாராக ஆகியிருந்தால் இந்தியத் தமிழனின் தலையெழுத்து கொஞ்சம் வேறுமாதிரியாக ஆகியிருந்திருக்கும் அல்லவா? ஏன் இந்த வரலாற்றுப்பிழை நடந்தது ?

3. இந்தப் படத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அருவருக்கத்தக்க முறையில் காட்டியுள்ளார்கள். இது ரொம்ப அநியாயம். மொழிப் போராட்டத்தை ஏதோ வன்முறைப்போராட்டம் போல் காட்டியிருக்கிறார்கள். இது இந்தப்படத்தின் மோசமான அங்கம்.
மேலும் ஏன் காமராஜரின் புகழ் கடைசிகாலத்தில் மங்க ஆரம்பித்தது என்பதை இந்தப் படம் சரியாகக் காட்டவில்லை.

மற்றபடி இது ஒரு சிறந்த திரைப்படம் என்றதான் சொல்வேன்,.
எல்லாத் தமிழனும் ஒருமுறையாவது,� நம் வரலாற்றில் நீங்காத இடம்பெற்ற காமராஜரைப்பற்றி இந்தத் திரைப்படத்தினை கண்டிப்பாகப் பார்க்கவேண்டும்.